மழைக்காலத்திற்கு வாய்க்கு சுவையாக, வயிற்றுக்கு இதமாக இந்த காய்கறி சூப் வைத்து குடித்தால் சளித் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்

soup
- Advertisement -

குளிர்காலம் வந்துவிட்டாலே எதையும் சூடாக சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். காலையில் சமைத்த உணவு ஒரு மணி நேரத்திலேயே பிரிட்ஜில் வைத்த உணவு போன்று மாறிவிடும். எனவே உணவு வகைகளை சுடச்சுட சாப்பிட்டால் மட்டுமே குளிர்காலங்களில் உடம்பிற்க்கு இதமாக இருக்கும். அப்படி உணவு மட்டுமல்லாமல் உடம்பிற்க்கு கொஞ்சம் புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் வெஜிடபிள் சூப் செய்தும் குடிக்கலாம். இப்படி அடிக்கடி சூப் செய்து குடித்தால் உடம்பில் சளி தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும். இப்படி ஒரு முறை காய்கறிகளைச் சேர்த்து சுவையான சூப் வைத்து குடுத்துப் பாருங்கள். உணர்ச்சி இல்லாத நாக்கிற்க்கும் உயிர் வந்தது போல் மிகவும் சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான வெஜிடபிள் சூப்பை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

hot-water1

தேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் – 1, கேரட் – 2, பீன்ஸ் – 50 கிராம், ஸ்வீட் கான் – 50 கிராம், காளான் – 100 கிராம், வெங்காயத்தாழ் – ஒரு கொத்து, சோள மாவு – 2 ஸ்பூன், வெண்ணெய் – ஒரு ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், பூண்டு – 5 பல், உப்பு – ஒரு ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு ஐந்து பல் பூண்டை யும் மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் கேரட் மற்றும் பீன்ஸை தண்ணீரில் அலசி கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

வெங்காயத்தடல்

அதன்பின் ஸ்பிரிங் ஆனியன் மற்றும் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு குக்கரை வைத்து நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், காளான், வெங்காயத்தாழ், ஸ்வீட் கான் போன்ற அனைத்து காய்கறிகளையும் குக்கரில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரை இறக்கி வைத்து, அடுப்பின் மீது மற்றொரு பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

veg-soup1

பின்னர் குக்கரில் வேக வைத்த காய்கறிகளையும் அதில் இருக்கும் தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். அதன்பின் 2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார் பவுடரை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொண்டு காய்கறிகளுடன் சேர்க்க வேண்டும். இவை நன்றாக கொதித்ததும் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விடவேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -