Butter Naan : ஹோட்டல்களில் கிடைக்கும் பட்டர் நாணை அதே சுவையில் சிம்பிளா வீட்டிலும் செய்யலாம்

butter naan
- Advertisement -

நாம் என்ன தான் வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும் என முடிவெடுத்து ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து சமைத்து செய்தாலும் கூட, ஒரு சில பொருள்களை நாம் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். அந்த மாதிரியான ஒரு உணவு வகை தான் இந்த பட்டர் நாண். இந்த சமையல் குறிப்பு பதிவில் மிகவும் எளிமையாக அதே நேரத்தில் ஹோட்டல் சுவையில் அட்டகாசமாக வீட்டில் எப்படி இந்த பட்டர் நாணை செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

மைதா – 2 கப்
உப்பு – 1/4 ஸ்பூன்
சுகர் – 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
பால் – 1/2 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
பட்டர் – சிறிதளவு

- Advertisement -

செய்முறை

இந்த ரெசிபி செய்ய முதலில் ஒரு பவுலில் மைதா மாவை எடுத்து போட்டு கொள்ளுங்கள். அதில் உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அடுத்ததாக இந்த மாவில் தயிர், எண்ணெய் இரண்டையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு வெதுவெதுப்பான பாலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இந்த மாவை கெட்டியாக பூரி மாவின் பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த மாவை மூடி போட்டு அரை மணி நேரம் கழித்து இந்த மாவை எடுத்து பாருங்கள் மாவு மிருதுவாக இருக்கும். இப்போது இந்த மாவிலிருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி திரட்டும் கட்டையில் வைத்து மெலிதாக திரட்டி கொள்ளுங்கள். இதை திரட்டும் போது ஒட்டாமல் வர கொஞ்சமாக மாவை மேலே தூவி திரட்டி கொள்ளுங்கள். இதில் கடைசியாக சிறிது கொத்தமல்லி தழையை மேலே கொஞ்சமாக தூவி ஒரே ஒரு முறை மட்டும் லேசாக தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் திரட்டி வைத்து நாணை அதில் சேர்த்து ஒரு புறம் சிவந்தவுடன் மறுபுறம் திருப்பிப் போட்டு அதுவும் சிவந்த பிறகு மறுபடியும் திருப்பி போட்டு எடுக்கும் போது மேலே கொத்தமல்லி தூவி பக்கமாக கொஞ்சம் பட்டறை தேய்த்து பிறகு எடுத்து விடுங்கள். சுவையான பட்டர் நாண் தயார் இதை நீங்கள் ஹோட்டலில் சாப்பிடும் பட்டர் நாணை போலவே சுவையாக இருக்கும்.

இதையும் படிக்காலமே: வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வெண்டைக்காய் 65

இதற்கு அசைவம் சைவம் என இரண்டிலும் ஏராளமான சைடிஷ் களை செய்யலாம். அசைவத்தில் செய்வதின் சிக்கன் குருமா இதற்கு மிகவும் நன்றாக இருக்கும். சைவம் எனில் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி இப்படியான சைடிஷ் கல் இதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இதை ஒரு முறை நீங்களும் இதே போல வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க இனி நாண் சாப்பிட ஹோட்டலுக்கு போக மாட்டீங்க.

- Advertisement -