- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்Ladies finger 65 : வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வெண்டைக்காய் 65

Ladies finger 65 : வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வெண்டைக்காய் 65

- Advertisement -

சத்தான காய்கறிகளை எப்படியாவது குழந்தைகளின் உணவில் சேர்த்து அவர்களை உண்ணச் செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து தாய்மார்களின் ஆசையாக இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் இன்று வெண்டைக்காயை வைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு வெண்டைக்காய் 65 எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வெண்டைக்காயில் பல அற்புதமான நல்ல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. வெண்டைக்காயை பச்சையாக அப்படியே கூட நாம் சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் போன்றோருக்கு ஒரு மாமருந்தாக திகழ்கிறது. மேலும் குழந்தைகள் சிறு வயதிலிருந்து வெண்டைக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களின் மூளை வளர்ச்சி சிறப்பாக செயல்படுகிறது. வெண்டைக்காயை வைத்து வெண்டைக்காய் 65 எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • வெண்டைக்காய் – 1/4 கிலோ
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – 1/2 பழம்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • மைதா அல்லது கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் வெண்டைக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்துக் கொண்டு அதன் காம்பையும் நுனியையும் நறுக்கிவிட்டு நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மசாலா நன்றாக போய் சேரும். இப்பொழுது இந்த வெண்டைக்காயுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது வெண்டைக்காய்க்கு மேலே போடுவதற்கான மாவை தயார் செய்து கொள்வோம். இதற்கு சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு, கடலை மாவு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

1/2 மணி நேரம் கழித்து ஊறிய அந்த வெண்டைக்காயில் கலந்து வைத்திருக்கும் மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். வெண்டைக்காய் ஊறிய பிறகுதான் மாவை சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் எண்ணையில் போட்டு பொறிக்கும் பொழுது மசாலா பிரியாமல் இருக்கும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் வெண்டைக்காயை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு வெண்டைக்காயை எடுத்து ஒன்று ஒன்றாக தனித்தனியாக போட்டு பொரிக்க வேண்டும்.

- Advertisement -

வெண்டைக்காய் நன்றாக பொரிந்து சிவந்த பிறகு அதை அப்படியே எண்ணெயிலிருந்து எடுத்து வடிகட்டி வேறு ஒரு தட்டிற்கு மாற்றிவிட வேண்டும். அவ்வளவுதான் வெண்டைக்காய் 65 தயாராகிவிட்டது. இதை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், எலுமிச்சம்பழ சாதம், புளி சாதம் போன்றவற்றிற்கும் சைடிஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இதுவரைக்கும் யாரும் செய்திடாத வித்தியாசமான பருப்பு சட்னி

சமைக்கவே தெரியாதவர்கள் கூட இந்த வெண்டைக்காய் 65 யை மிகவும் எளிமையாக எந்த சிரமமும் இல்லாமல் செய்து முடிக்க முடியும் என்பதால் அனைவரும் செய்து சாப்பிட்டு ருசிப்போம்.

சற்று முன்