ஹோட்டல் ஸ்டைலில் ரிச்சான ஆனியன் ஊத்தாப்பம் வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்கள்! எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

ஹோட்டல் ஸ்டைல் ஆனியன் ஊத்தாப்பம் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டிலிருக்கும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்க்குமே இந்த வெங்காய ஊத்தாப்பம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். சாதாரண தோசையை விட இது போல வெங்காயம் சேர்த்து ஊத்தாப்பம் செய்து கொடுத்தால் வயிறு நிரம்பும், ஆரோக்கியமும் கூட எனவே ஆனியன் ஊத்தாப்பம் எளிதாக நம் வீட்டிலேயே எப்படி ஹோட்டல் ஸ்டைலில் செய்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ஆனியன் ஊத்தப்பம் செய்வது எப்படி?
முதலில் ஊத்தாப்பம் செய்வதற்கு இட்லி, தோசை மாவு எந்த பதத்தில் இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இட்லி மாவு போல கெட்டியாகவும் இல்லாமல், தோசை மாவு போல தண்ணீராகவும் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் இருந்தால் தான் ஊத்தாப்பம் சூப்பராக வரும். எனவே இட்லி மாவில் அதற்கு ஏற்ப தண்ணீரை சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் நீங்கள் எவ்வளவு பேருக்கு தோசை சுட போகிறீர்களோ, அவ்வளவு பேருக்கு தேவையான அளவிற்கு வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து ரொம்பவும் பொடிப்பொடியாக, குட்டி குட்டியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நறுக்கிய பின்பு அதை கைகளால் நன்கு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. வெங்காயத்தை விட பாதி அளவிற்கு தக்காளியை நன்கு சுத்தம் செய்து பின் பக்கமாக திருப்பி நல்ல சார்பான கத்தியால் வெட்டினால் ரொம்பவும் பொடிப்பொடியாக, அழகாக, நேர்த்தியாக வெட்ட வரும். அது போல பொடிப்பொடியாக நறுக்கி வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இதே மாதிரி கறிவேப்பிலை கொஞ்சம் மற்றும் மல்லித் தழை சிறிதளவு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து ரொம்பவும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாயைப் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். காரம் அதிகம் தேவை இல்லை. பிறகு இட்லி பொடியை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். நன்கு தோசை கல் காய்ந்த உடன் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொண்டு எண்ணெய் தேய்த்து தடவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்பு ஒன்றரை கரண்டி தோசை மாவு எடுத்து ஒரே மாதிரியாக வட்ட வடிவத்தில் தடிமனாக தோசையை கொஞ்சமாக பரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது நீங்கள் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை முழுவதுமாக எல்லா இடங்களிலும் சேரும்படி தூவி கொள்ளுங்கள். பின்னர் சுற்றிலும் நன்கு தாராளமாக எண்ணெயை விட்டுக் கொள்ளுங்கள். ஊத்தாப்பத்திற்கு எண்ணெய் அதிகம் விட்டால் தான் நன்றாக இருக்கும். பாதி அளவிற்கு தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய மல்லி மற்றும் கறிவேப்பிலை கொஞ்சம், ஒன்றிரண்டு பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து லேசாக அழுத்தி கொள்ளுங்கள்.

பின்னர் அதன் மீது அரை ஸ்பூன் அளவுக்கு இட்லி பொடியை எல்லா இடங்களிலும் பரவலாக தூவி கொள்ளுங்கள். நீங்கள் இதையெல்லாம் செய்வதற்குள் ஒருபுறம் ஊத்தாப்பம் நன்கு வெந்திருக்கும். அப்படியே மெதுவாக எடுத்து திருப்பிப் போட்டுக் கொள்ளுங்கள். திருப்பி போட்ட பின்பு அழுத்தம் கொடுக்கக் கூடாது. லேசாக வேக வைத்து அப்படியே மெதுவாக எடுத்து தட்டில் வைத்து கெட்டியான தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் சுடச்சுட பரிமாறினால் ஹோட்டல் ஊத்தாப்பம் தோற்றுப் போய் விடும், அந்த அளவிற்கு இந்த ஊத்தாப்பம் ருசியாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -