வெறும் 10 நிமிடத்தில் ஓட்டல் ஸ்டைல் குருமாவை ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்! இட்லி தோசைக்கு செம்ம சைட் டிஷ் இது.

kuruma

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள குருமா ஸ்டைலில் குழம்பு வைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் அதிகப்படியான நேரம் எடுக்கும். ஆனால் மிளகாய்தூள் கூட சேர்க்காமல் வெறும் பச்சை மிளகாயைப் போட்டு, கமகம வாசத்தோடு ஹோட்டல் ஸ்டைலில் ஒரு குருமாவை எப்படி வைப்பது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அவசர அவசரமாக காலை உணவு சமைக்கும்போதும், இந்த குருமா செய்வது அவ்வளவு ஈஸி! முந்தைய நாளே தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள் போதும்.

kuruma 4

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அதில் கிராம்பு – 2, பட்டை – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், சிறிய வெங்காயம் – 1 நக்கியது,  பூண்டு பல் – 4 தோல் உரித்தது, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4 லிருந்து 5 காரத்திற்கு ஏற்ப, பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் பச்சை வாடை போகும் அளவுக்கு வதக்கிக் கொள்ளவேண்டும்.

இறுதியாக 1 கப் அளவு தேங்காய் துருவலை சேர்த்து, அடுப்பை அணைத்து விட்டு, நன்றாக தேங்காய் துருவலை வதக்கி விடுங்கள். இந்த கலவையை ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளலாம். திப்பி திப்பியாக அரைக்கக் கூடாது. மைய அரைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் குருமா சுவையாக இருக்கும். இது அப்படியே ஓரமாக இருக்கட்டும்.

kuruma1

மீண்டும் அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி கொள்ளுங்கள். அதில் கிராம்பு – 1, பட்டை – 1, சோம்பு – 1/2 ஸ்பூன் போட்டு தாளித்து நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1 போட்டு, ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு கண்ணாடி பதம் வரும்வரை வதக்கினால் போதும். இந்த இடத்தில் வெங்காயத்தில் குழம்பிற்கு தேவையான உப்பை போட்டு விடுங்கள். வெங்காயம் சீக்கிரமே வதங்கி விடும்.

- Advertisement -

அடுத்தபடியாக பச்சைமிளகாய் – 2 கீனியது, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பழுத்த வெட்டிய தக்காளி பழம் – 2, இவைகளைப் போட்டு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் சேர்த்து 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தாலே போதும். இந்த விழுதில் பொட்டுக்கடலைக்கு பதிலாக முந்திரி பருப்பையும் சேர்த்து அரைக்கலாம். பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் குருமா கொஞ்சம் திக்காக கிடைக்கும். தண்ணீர் பதத்தில் செய்தால்தான் குருமாவில் சுவை அதிகமாக இருக்கும். கொஞ்சம் தண்ணீரை முதலிலேயே சேர்த்து ஊற்றிக் கொள்ளுங்கள்.

kuruma2

ஹோட்டல் ஸ்டைல் கமகமக்கும் குருமா தயார். இதில் மிளகாய்த்தூள் கூட சேர்க்க போவது கிடையாது. காரத்திற்கு பச்சைமிளகாய் தான், உங்கள் வீட்டு காரத்திற்கு ஏற்ப அரைக்கும்போது பச்சை மிளகாயை தகுந்தவாறு போட்டுக் கொள்ள வேண்டும்.

kuruma3

இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி சுடச்சுட இட்லியின் மேல் ஊற்றி பரிமாறி பாருங்கள் இதன் சுவை நாக்கில் ஒட்டிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இட்லி தோசை சப்பாத்தி ஊத்தப்பம் இப்படி எதற்கு வேண்டுமென்றாலும் இது அசத்தலான சைட் டிஷ். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.