ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு செய்ய, ஒரு ரகசிய டிப்ஸ்!

pudalangai-kuttu

ஆரோக்கியமான காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. சிலபேர் புடலங்காயை வைத்து பொரியல் செய்வார்கள். சிலர் வீடுகளில் புடலங்காய் கூட்டும் செய்வார்கள். ஆனால் அந்தக் கூட்டு கொழகொழவென்று சரியாக வராது. அப்படி சரியான முறையில் வந்திருந்தால், அதன் ருசியானது குறைவாக இருக்கும். அதாவது கூட்டு தண்ணீர்விட்டு பதத்தில், ‘சல்லுன்னு இருக்கு’ அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா? கூட்டி பக்குவம் தவறி விடும். பக்குவம் தவறாமல் சரியான முறையில் புடலங்காய் கூட்டு எப்படி செய்வது பார்த்துவிடலாமா? இந்தக் கூட்டை காரக்குழம்பு சாதத்திற்கு சைட் டிஷாக வைத்து சாப்பிட்டீர்கள் என்றால், மொத்த சாதமும் காலியாகி விடும்!

pudalangai

Step 1:
கடலைப்பருப்பு – 1/4 கப், பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், குழம்பு மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், புடலங்காய் பொடியாக வெட்டியது – 1 கப்(ரொம்பவும் பொடியாக வெட்டக் கூடாது), கூட்டிற்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஒரு கப் அளவு ஊற்ற வேண்டும்.

கடலை பருப்பையும், பாசிப்பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தண்ணீரை வடித்துவிட்டு, பருப்பை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, முதலில் பருப்பை சேர்க்கவேண்டும். அந்த பருப்பு மூழ்கும் அளவிற்கு ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, ஜீரகம் சேத்துப்பட்டு, அதன்பின்பு ஒரு கப் அளவு வெட்டி வைத்திருக்கும் புடலங்காய் சேர்க்க வேண்டும்.

podalangai-cutting

இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இதை அப்படியே தான் வேக வைக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறி விடக்கூடாது. (இது முதல் டிப்ஸ்) புடலங்காய் மேல் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் சரியான பக்குவத்தில் வெந்துவிடும். குக்கரை மூடி 2 விசில் வைத்தால் மட்டும் போதும். பருப்பும் குழையக் கூடாது. புடலங்காயும் குழையக்கூடாது. சரியான பக்குவத்தில் வெந்து இருக்கவேண்டும். குக்கர் இரண்டு விசில் வருவதற்குள் அடுத்து அரவை தயார் செய்ய வேண்டும்.

- Advertisement -

Step 2:
ஒரு மிக்ஸி ஜாரில், 1/4 கப் அளவு தேங்காய் துருவல், 4 பச்சை மிளகாய், (காரம் அதிகமாக வேண்டுமென்றால் பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்), 1 ஸ்பூன் சீரகம், 1 பெரிய வெங்காயம் (துண்டாக நறுக்கியது), ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, பெருங்காயத்தூள், எண்ணி 10 பொட்டுக்கடலை வைக்கவும். அதிகமாக பொட்டுகடலை வைத்தால் கூட கொழகொழப்பு வந்துவிடும். கொஞ்சம் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக இவைகளை அரைத்து எடுத்துக் கொள்ளவும். (டிப்ஸ் 2, அரிசிமாவு சேர்ப்பது) இந்த கலவையை நைசாக அரைத்து விட்டீர்கள் என்றாலும், கூட்டின் பக்குவம் மாறிவிடும்.

aravai

Step 3:
இப்போது இரண்டு விசில் வந்து, குக்கரில் பருப்பும் புடலங்காயில் சரியான விதத்தில் வெந்திருக்கும். அதை கொஞ்சம் கிளறி விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள். இந்த இடத்தில் உப்பு சரியாக இருக்கா என்று பார்த்து போட்டுக் கொள்ள வேண்டும். நன்றாக கொதித்த பின்பு கூட்டு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும்.

podalangai-kuttu

Step 4:
சிறிய கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றி, 1/4 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 வரமிளகாய் உடைத்து சேர்த்துக்கொள்ளுங்கள், 2 கொத்து கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயம், தாளித்து புடலங்காய் கூட்டில் கொட்டி விடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி சுடச்சுட பரிமாறினார்கள் என்றால் நீங்கள் செய்த கூட்டு நிச்சயம் யாருக்கும் பத்தவே பத்தாது. அவ்வளவு சீக்கிரம் காலியாகிவிடும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
புதுவிதமான மோர் குழம்பு! காய் சேர்க்காமல் ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.