சரவண பவன் தக்காளி சட்னி எப்படி ஈசியாக செய்யணும்னு தெரியுமா? சுவையான ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி எளிதாக செய்வது எப்படி?

tomato-thakkli-chutney1_tamil
- Advertisement -

மணக்க மணக்க தக்காளி சட்னி எப்படி சரவண பவன் ஹோட்டல் ஸ்டைலில் செய்வது? இட்லி, தோசை, உப்புமா, பணியாரம் என்று எல்லாவற்றுக்கும் சிறந்த காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த தக்காளி சட்னி ருசியிலும் அசத்தலாக இருக்கப் போகிறது. ரொம்பவே சுலபமாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி 10 நிமிடத்திற்குள் ஹோட்டல் ஸ்டைல் சுவையான தக்காளி சட்னி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – நான்கு, வரமிளகாய் – நான்கு, பெரிய வெங்காயம் – இரண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி பழங்கள் – 3, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வரமிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
தக்காளி சட்னி செய்வதற்கு முதலில் ஒரு பேனை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தோலுரித்த பூண்டு பற்கள் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக கிண்டி விடுங்கள். அதன் பிறகு காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் சேர்த்து கிண்டுங்கள்.

இவை லேசாக வதங்கியதும் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள். பின்னர் தோல் உரித்த நன்கு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கியதும், தக்காளி பழங்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டு லேசாக வதக்கி விடுங்கள். தக்காளி பாதி அளவுக்கு வதங்கும் பொழுது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் சீக்கிரம் வதங்கி விடும். மசிய இவை வதங்கியதும் அடுப்பை அனைத்து ஆறவிட்டு விடுங்கள். நன்கு இவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இப்போது தாளிப்பில் சேர்க்க வேண்டும். எனவே அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மாவு அரைக்காம பத்தே நிமிஷத்துல ஒரு சூப்பரான மசாலா இட்லி ரெடி பண்ணிடலாம் தெரியுமா? மாவு அரைக்காமா இட்லியே கஷ்டம், இதுல மசாலா இட்லி எப்படி? அப்படின்னு தானே யோசிக்கிறீங்க, வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

தக்காளி சட்னிக்கு சீரகம் போட்டு தாளிக்கும் போது ரொம்பவே சுவையாகவும், மணமாகவும் இருக்கும். பின் இதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு வர மிளகாய் கிள்ளி சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள். தாளிப்பு அடங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை இதனுடன் சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், இதை அப்படியே இட்லி, தோசை, உப்புமா என்று சுடச்சுட பரிமாறி தொட்டு சாப்பிட்டு பாருங்கள், ரொம்பவே ருசியாக இருக்கும். இதே மாதிரியான அசத்தலான சுவையில் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபி நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -