ரவை உப்புமாவை ஒரு முறை இப்படி ஹோட்டல் ஸ்டைலில் ஃபர்பெக்ட்டா செஞ்சு பாருங்க. உப்புமானாலே தல தெரிக்க ஓடுறவங்க கூட உப்புமான்னா இப்படித் தான் இருக்கணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

hotel style upma
- Advertisement -

டிபன் வகைகளிலே இந்த ரவை உப்புமா என்றால் பலருக்கும் அலர்ஜி தான். ரவை உப்புமா நல்ல ஒரு ஆரோக்கியமான எளிமையாக செரிக்க கூடிய உணவு தான். ஆனாலும் ஏனோ இந்த ரவை உப்புமாவை பலருக்கும் பிடிப்பதில்லை இது செய்முறை சரியாக இருந்தால் ரவை உப்புமாவை போல சுவையான உணவு இல்லை என்று சொல்லும் அளவிற்கு நன்றாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரவை உப்புமாவை எளிமையாக அதே நேரத்தில் அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த ரவை உப்புமா செய்வதற்கு முதலில் அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் ஊற்ற விருப்பமில்லாதவர்கள் அதற்கு பதிலாக எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சூடானதும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை, ஒரு கைப்பிடி முந்திரி இரண்டையும் சேர்த்த பின் அடுப்பை வைத்து சிவந்து வரும் வரை வறுத்து அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அதே எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்து, ரெண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு மூன்றும் சேர்ந்து பொரியும் வரை காத்திருங்கள். இந்த சமயத்திலும் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்து இதில் கால் டீஸ்பூன் பெருங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு ஒரு கப் வறுத்த ரவையை இதில் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். வறுக்காத ரவை எனில் தனியாக வறுத்த பிறகு இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றுடன் இந்த ரவை நன்றாக வறுபட்டு வாசம் வர வேண்டும். ஆனால் ரவையின் நிறம் மாறி விடக்கூடாது கவனமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இதில் ஒரு சின்ன தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் தக்காளி வதங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தக்காளி சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு ஒன்னரை டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்ற வேண்டும். வெண்ணீரூற்றி ஒரு முறை கலந்த பிறகு அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உப்பு லேசாக கரிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் அப்பொழுது தான் ரவை வெந்து வரும் போது சரியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தேங்காய் சட்னி செஞ்சா இப்படி தான் செய்யணும்! ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை தேங்காய் சட்னி ருசியின் ரகசியம் இது தான் தெரியுமா?

இவையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்த பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை அப்படியே விடுங்கள். அதன் பிறகு மூடியை எடுத்து விட்டு நாம் ஏற்கனவே வறுத்து வைத்த வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு பரிமாறினால் இந்த ரவை உப்புமாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனும் அளவிற்கு சுவையாக இருக்கும்.

- Advertisement -