தேங்காய் சட்னி செஞ்சா இப்படி தான் செய்யணும்! ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை தேங்காய் சட்னி ருசியின் ரகசியம் இது தான் தெரியுமா?

coconut-chutney1
- Advertisement -

இட்லி, தோசைக்கு பெரும்பாலும் ரொம்ப ஈசியாக செய்யக்கூடிய சட்னி தேங்காய் சட்னி ஆகும். அடிக்கடி தேங்காய் சட்னி செய்பவர்கள், ஹோட்டல் ஸ்டைலில் வெள்ளையாக ருசியான தேங்காய் சட்னி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு முறையை ட்ரை பண்ணி பார்க்கலாம். ஒரு சில பொருட்களை கூடுதலாக சேர்க்கும் பொழுது தேங்காய் சட்னி ருசி கூடுகிறது. அத்தகைய சமையல் குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – அரை மூடி, பொட்டுக்கடலை – ரெண்டு டேபிள் ஸ்பூன், இஞ்சி – ஒரு இன்ச், பச்சை மிளகாய் – இரண்டு, சின்ன வெங்காயம் – இரண்டு, முந்திரிப் பருப்பு – நான்கு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – ரெண்டு.

- Advertisement -

செய்முறை

இந்த ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை தேங்காய் சட்னியை அரைக்க முதலில் அரை மூடி தேங்காயை துருவலில் இட்டு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயின் பின் பகுதியில் இருக்கக்கூடிய தோலை நீக்கிவிட்டு வெள்ளையாக இருக்கக்கூடிய சதை பற்றை மட்டும் துருவி எடுத்து செய்யும் பொழுது ஹோட்டல் ஸ்டைலில் நமக்கு தேங்காய் சட்னி கிடைக்கிறது. இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

துருவிய தேங்காயை அதில் சேர்த்து காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய் கீறி போட்டுக் கொள்ளுங்கள். பொட்டுக்கடலை இரண்டு ஸ்பூன் அளவுக்கு சேர்த்து கொள்ள வேண்டும். முழு பொட்டுக் கடலையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதனுடன் ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

சுவைக்கு நான்கு முழு முந்திரி பருப்புகளும், கெட்டியான பதத்திற்கு இரண்டு சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து முழுதாக அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது கொஞ்சம் போல தண்ணீர் விட்டு ரொம்ப நைசாக இல்லாமல், கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சாப்பிட நன்றாக இருக்கும். அரைத்து எடுத்த இந்த சட்னியை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
குழிப்பணியாரம் சாப்பிடணும் ஆசைப்பட்டா மாவரைச்சி புளிக்க வைக்கணும் என்கிற அவசியம் இல்லை. இரண்டு உருளைக்கிழங்கு இருந்தா சட்டுனு இப்படி குழிப்பணியாரம் செஞ்சு சாப்பிடுங்க.

தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின்னர் இவற்றுடன் கொஞ்சம் சீரகம், ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடைசியாக இரண்டு வரமிளகாயை காம்பு நீக்கி விட்டு கிள்ளி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி சட்னியில் சேர்த்து கொட்டுங்கள். அவ்வளவுதான், ருசியான கெட்டியான வெள்ளை ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி இப்பொழுது ரெடி!

- Advertisement -