சுத்தத்திற்கு முக்கியத்துவம் இல்லத்தரசிகளுக்கு முத்தான 6 குறிப்புகள் இதோ!

cleaning-scrubber
- Advertisement -

வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய முடியாவிட்டாலும் அதற்கென ஒரு நாளை ஒதுக்கி மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்தால் தான் வீடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் மேலும் அதில் நாம் வசிப்பதற்கும் விருப்பமானதாக இருக்கும். சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இல்லத்தரசிகளுக்கு தேவையான அற்புதமான குறிப்புகள் தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன? என்பதை பார்ப்போம்.

குறிப்பு 1:
மரத்தாலான பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதன் மீது தேநீர் போன்ற ஏதாவது ஒரு பொருள் சிந்திக்க கரை ஏற்பட்டு விட்டால் அதை எளிதாக துடைத்து எடுக்க ஆல்கஹால் அல்லது வெஜிடபிள் எண்ணெய் பயன்படுத்தலாம். மரப்பொருட்கள் எப்பொழுதும் மழை மற்றும் அதிக சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மர பொருட்களின் மீது இருக்கும் படிமத்தின் மீது இவை வேதிவினை புரிந்து சேதம் உண்டாக்கி விடும்.

- Advertisement -

குறிப்பு 2:
தரைகளை துடைக்கும் லிக்விட் திடீரென தீர்ந்து விட்டால் கவலை கொள்ள தேவையில்லை. ஒரு பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் வினிகர், இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு கலந்து வீட்டை துடைத்து எடுத்தால் பளபளவென மின்னுவதோடு மட்டுமல்லாமல் அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீங்கி, நல்ல வாசம் மணமணக்கும். இவற்றில் இருக்கும் ஆசிட் போன்ற மூலக்கூறுகள் வீட்டை சுத்தப்படுத்துவதோடு மர பொருட்களின் மீது வேதிவினை ஏற்படுத்தக்கூடியது. எனவே மரப் பொருட்களை தவிர்த்து மற்ற பாகங்களில் இதனை பயன்படுத்துவது நல்லது.

குறிப்பு 3:
உங்கள் ஆடையின் மீது சுவிங்கம் ஒட்டிக் கொண்டிருந்தால் அதை நீக்குவது கடினமாக இருக்கும். இதற்கு நீங்கள் அந்த துணியை கொண்டு போய் ப்ரீசரில் வைத்து பாருங்கள், கொஞ்ச நேரத்தில் சுவிங்கம் உறைந்து கெட்டியாகி விடும். அதன் பிறகு கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி சுரண்டி எடுத்தால், எளிதாக வந்துவிடும். சுவிங்கம் ஒட்டியுள்ள இடத்தில் ஐஸ் கட்டிகள் அல்லது வெதுவெதுப்பாக வினிகர் கொஞ்சம் ஊற்றித் தேய்த்தால் எளிதில் நீங்கிவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:
பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்பான்ச் மெல்லிய நூல் இலைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுள் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் மூலம் கிருமித் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே ஸ்பாஞ்ச் பயன்படுத்துபவர்கள் அதனை இறுதியாக சுடு தண்ணீர் அல்லது குளிர்ந்த நீர் ஏதாவது ஒன்றில் நன்கு அலசி எடுத்து பிழிந்து உலரவிட்டு எடுத்து வைக்கலாம்.

குறிப்பு 5:
வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஜன்னல், கதவுகள் வேலைபாடுகள் நிறைந்ததாக இருந்தால் அதை ஈரத்துணி கொண்டு துடைப்பதை விட பல்துலக்கும் பழைய பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்த பின்பு, காய்ந்த துணியால் துடைத்தால் நீண்ட நாட்களுக்கு பளிச்சென மின்னும்.

குறிப்பு 6:
சமையல் செய்யும் அடுப்பிற்கு பின்பு ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸ்களில் எண்ணெய் கறை படிந்து, பிசுபிசுப்புடன் காணப்படும். இதற்கு கொஞ்சம் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் உடன், சமையல் சோடாவை சேர்த்து சாதாரண ஸ்கிரப்பர் பயன்படுத்தி நன்கு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு ஈரத் துணியால் துடைத்தால் டைல்ஸ் பளபளவென மின்னும். வாஷ்பேஷன், சிங்க் போன்ற இடங்களில் துர்நாற்றம் வீசினால் அங்கு கொதிக்கும் சுடு நீருடன் எலுமிச்சை சாறு கலந்து துவாரத்தில் ஊற்றினால் அடைப்புகள் நீங்கி, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

- Advertisement -