உங்கள் வீட்டில் கால் மிதியடியை கை வைக்காமல் ரொம்ப சுலபமாக புத்தம் புதியது போல் சுத்தமாக இந்த 1 டிப்ஸ் போதுமே!

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் நாம் பார்த்து பார்த்து சுத்தம் செய்யும் பொழுது கால் மிதியடியையும் சுத்தம் செய்தாக வேண்டும். மற்ற பொருட்களை விட கால் மிதியடியில் அதிகமான அழுக்குகள் சேரும் இடமாக இருப்பதால் அதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் ஆகிறது. சுத்தம் சோறு போடும் என்கிற பழமொழிக்கு ஏற்ப நம் வீட்டையும், வீட்டில் இருக்கும் பொருட்களையும் எப்படி சுத்தமாக வைத்து இருக்கிறோம் என்பதை பொறுத்து தான் ஆரோக்கியமும் இருக்கிறது. எனவே கால்மிதி அடிகளை ரொம்ப சுலபமாக எப்படி சுத்தம் செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

mat0

ஒரு வீட்டில் எத்தனை அறைகள் இருக்கிறதோ, அத்தனை அறையின் வாசலில் ஒரு மிதியடியை போட்டு வைப்பது மிகவும் நன்று. அந்த அறைக்குள் நுழைவதற்கு முன்னர் நம்முடைய கால்களை அதில் துடைத்து விட்டு பின்னர் நுழைவது ஆரோக்கியம் தரும் செயலாகும். இப்படி நாம் நம் கால்களை துடைக்க பயன்படுத்தும் கால் மிதியடிகளை கண்டிப்பாக தினமும் அலசி காயப் போட்டால் இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை.

- Advertisement -

ஆனால் இன்று இருக்கும் அவசரமான சூழலில் இவற்றையெல்லாம் கவனிக்க நமக்கு நேரம் கிடைப்பதில்லை எனவே வாரம் ஒரு முறையாவது அதிகம் மெனக்கெடாமல் கால் மிதியடிகளை இப்படி சுத்தம் செய்யலாம். பளிச்சென புத்தம் புதியது போல, கிருமிகள் இல்லாத கால் மிதியடிகளை பெற, நாம் பச்சை தண்ணீரை விட சுடு தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

salt-water-bath

ஒரு வாயகன்ற பக்கெட்டில் சுடு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். வெது வெதுப்பாக இருக்கும் இந்த தண்ணீரில் உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா கால் மிதியடிகளையும் ஒன்றாகப் போட்டு உள்ளே மூழ்குமாறு செய்யுங்கள். நீங்கள் கை வைக்காமல் ஒரு பெரிய கட்டை அல்லது நீங்கள் மாப் போட பயன்படுத்தும் மாப்பின் பின்பகுதியை உபயோகப்படுத்தி மூழ்க செய்யலாம்.

- Advertisement -

ஒரு அரைமணி நேரம் நன்கு சுடு தண்ணீரில் ஊறிய பிறகு அதனை அலசி எடுத்து தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். இப்படி செய்யும் பொழுதே பாதி அளவிற்கு அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி விட்டிருக்கும். பின்பு அதே போல ஒரு பக்கெட்டில் சுடு தண்ணீர் ஊற்றி 2 கரண்டி டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் வினிகர் அல்லது 2 ஸ்பூன் பேக்கிங் சோடா ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மூன்று மூடிகள் அளவிற்கு டெட்டால் ஊற்றிக் கொள்ளுங்கள். டெட்டால் கிருமி நாசினி என்பதால் கால் மிதியடிகளில் இருக்கும் கொடிய கிருமிகளையும் எளிதாக நமக்கு நீக்கி கொடுக்கும்.

mat1

அதிக அளவிற்கு ஒரு மணி நேரம் இதனை அப்படியே ஊற விட்டு விடுங்கள். இந்த எல்லா கலவையும் சேர்த்து ஒவ்வொரு நூலிழைகள் உள்ளும் சென்று கிருமிகளையும், அழுக்குகளையும் தண்ணீரில் ஈர்த்துக் கொள்ளும். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் மிதியடிகளை ஒவ்வொன்றாக எடுத்து சாதாரண தண்ணீரில் ஒரு முறை அலசி நன்கு பிழிந்து காய வைத்தால் போதும், புத்தம் புதிய மிதியடிகள் நீங்கள் கை வைக்காமலேயே உங்களுக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -