உங்க வீட்டில் இருக்கும் பொருட்களை மேஜிக் போல சுத்தம் செய்ய இந்த 2 பொருட்கள் போதுமே! இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சு வெச்சுகிட்டா க்ளீனிங்ல நீங்கதான் குயின்.

cleaning
- Advertisement -

இந்த பதிவில் கொடுக்கப்போகும் எல்லா வகையான டிப்ஸ்கும் நாம் பயன்படுத்துவது பேக்கிங் சோடா. பேக்கிங் சோடா என்றால், இதை சோடா உப்பு, ஆப்ப சோடா, இட்லி சோடா என்று சொல்லுவார்கள். மளிகை பொருட்கள் விற்கும் கடைகளிலேயே சுலபமாக நமக்கு கிடைக்கும். கூடவே வினிகர் ஒரு பாட்டிலை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களை வைத்து சரியான முறையில் எப்படி சுத்தம் செய்யப் போகின்றோம். இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

baking-soda

முதலில் உங்களுடைய வீட்டு சமையலறை சிங்க் தண்ணீர் போகும் பைப்பை எப்படி சுத்தம் செய்வது? தண்ணீர் போகும் அந்த ஓட்டையில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை போட்டு விட்டு, 1/4 கப் அளவு வினிகரை ஊற்றி விடுங்கள். அது அப்படியே பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் ஊறட்டும். அதன் பின்பு கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை, 1 கப் அளவு அந்த ஓட்டையில் பிரஷரோடு ஊற்றி விட வேண்டும். கரப்பான் பூச்சி கூட வராது. அடைப்பு சுத்தமாக நீங்கி விடும்.

- Advertisement -

இதைப்போல் வாரம் ஒருமுறை உங்களுடைய சிங்கை நன்றாக காய வைத்து விட்டு, பேக்கிங் சோடாவை தூவி, கொஞ்சமாக வினிகரை தெளித்து விட்டு, ஒரு நார் போட்டு சுத்தமாக தேய்த்து ஊற விட்டு விட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் நன்றாக தேய்த்து, தண்ணீர் போட்டு கழுவி விட்டால் சில்வர் சிங்க், கருப்பு கல்லால் செய்யப்பட்ட சிங்க், மார்பில் சிங்க், கிரானைட் சிங்க் எதுவாக இருந்தாலும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி சுத்தமாகிவிடும்.

shink

நம் வீட்டில் இருக்கும் வெஜிடபிள் கட்டர்! வாரம் ஒருமுறை இதன்மேல் பேக்கிங் சோடாவை தூவி எலுமிச்சை பழ சாரைரை 1 ஸ்பூன் அளவு ஊற்றியோ அல்லது வெறும் எலுமிச்சை பழ தோலை வைத்தும் கூட நன்றாக தேய்த்து சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவேண்டும். ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையென்றால் அந்த கட்டையில் கண்ணுக்கு தெரியாமல் பூசனம் பிடித்திருக்கும்.

- Advertisement -

உங்க வீட்ல இருக்கிற வாட்டர் கேனை உள்பக்கத்தில் கூட சுத்தமாக, சுத்தம் செய்ய முடியும். பாட்டனின் உள் பக்கத்தில் 1 ஸ்பூன் அளவு அரிசியை போட்டுக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் அளவு கல் உப்பை போட்டுக்கொள்ளுங்கள். 1 ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா போட்டு நல்ல கொதிக்கின்ற தண்ணீரை ஊற்றி மூடி போட்டு குலுக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில் ஆக இருந்தால் பச்சைத் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். எவர் சில்வர் வாட்டர் கேன் என்றால் சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். நன்றாக குலுக்கி கழுவி மீண்டும், நல்ல தண்ணீரை ஊற்றி சுத்தமாக கழுவி விட்டால் போதும். உள்ளே எந்த பிசுபிசுப்பும் இல்லாமல் கெட்ட வாடை அடிக்காமல் இருக்கும்.

vessels

உங்க வீட்ல பாத்திரம் அடிப் பிடித்திருந்தால், அதை தேய்க சிரமம் இருக்கும். பாத்திரம் தீய்ஞ்சி போயிருச்சு அப்படின்னு சொல்வாங்கல்ல! அந்தப் பாத்திரங்கள். அடிப்பிடித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அது நிரம்ப தண்ணீரை வைத்து, அடுப்பை பற்ற வைத்து, கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது அதில் சோடா உப்பு 1 ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். சோடா உப்பை போட்டு பின்பு அந்த தண்ணீர் பொங்கி வரும் சமயத்தில் அடுப்பை அனைத்து விட்டு, அந்தப் பாத்திரத்தை சோடா உப்பு தண்ணீரோடு 1/2 மணி நேரம் ஊற விட வேண்டும். அதன் பின்பு சாதாரண நாரை போட்டு தேய்த்தாலே போதும். உங்களது பாத்திரம் சுத்தமாகி விடும்.

- Advertisement -

aluminium-foil

உங்க வீட்ல வெள்ளி பாத்திரம் கருப்பாக இருக்கிறதா? ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அந்தத் தண்ணீரில் அலுமினியம் ஃபாயில் பேப்பரை போட்டு ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும். அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது கருப்பாக இருக்கும் வெள்ளி பாத்திரத்தை இந்த தண்ணீரில் மூழ்க வைத்து, 1 நிமிடம் வரை ஊறவைத்து வெளியிலெடுத்து பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். பாத்திரம் பளபளப்பாக மாறியிருக்கும். பிறகு சாதாரண லிக்விட், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் மூலம் தேய்த்து, சுத்தம் செய்தால், வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். (அலுமினியம் ஃபாயில் பேப்பர் என்றால் கடைகளில் கிடைக்கும். இல்லை என்றால் பெரிய பெரிய ஹோட்டல்களில் சப்பாத்தி பரோட்டாக்களை இந்த பேப்பரில் தான் சுற்றி பேக் செய்து கொடுப்பார்கள். அதை சுத்தம் செய்து கூட இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

silver-vessels

உங்க வீட்ல குழந்தைங்க போடுற ஷூ எப்ப பாத்தாலும் கெட்ட வாடை அடிச்சிக்கிட்டு இருக்குமா? அந்த ஷூவுக்கு உள்பக்கத்தில் பேக்கிங் சோடாவை 1/2 ஸ்பூன் அளவு கொட்டி நன்றாக பரப்பி விட்டு விடுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை எல்லா பேக்கிங் சோடாவையும் நன்றாக துடைத்து வெளியே எடுத்துவிட்டால் உங்கள் ஷூ துர்நாற்றம் நிச்சயம் வீசாது.

shoo

உங்க வீட்டு சமையலறை பிடி துணியை இப்படி சுத்தம் செய்து பழங்கள். 1 கப்பில் சுடு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துணி துவைக்கப் பயன் படுத்தும் பவுடர் 1 ஸ்பூன், பேக்கிங் சோடா 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து, அதன் பின்பு பிடி துணியை 2 மணி நேரம் அந்த தண்ணீரில் ஊற வைத்து துவைத்தால் போதும். பிடி துணியில் இருக்கும் பிசுபிசுப்பு சுலபமாக நீக்கிவிடும்.

இதையும் படிக்கலாமே
அட! இத்தனை நாட்களாக இவ்வளவு ஈஸியான, சூப்பரான டிப்ஸ் எல்லாம் தெரியாமலே போயிருச்சே! இப்பவும் இந்த டிப்ஸை தெரிஞ்சுக்க மிஸ் பண்ணிடாதீங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -