ஸ்ரீ ராமர் எத்தனை ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் தெரியுமா?

ramanl
- Advertisement -

நாம் அனைவரும் ராமபிரானை பற்றியும் சீதையின் இறப்பை பற்றியும் அறிந்திருப்போம். அனால் ராமபிரான் எத்தனை ஆண்டுகள் இந்த முன்னுலகில் வாழந்தார்த்தார் தெரியுமா? அவர் வைகுண்டம் செல்ல முடிவெடுத்தபோது என்ன நடந்தது தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

ஸ்ரீ ராமர் 11 ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணுலகில் வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. அதன் பிறகு அவர் வைகுண்டம் செல்ல முடிவெடுத்து அயோத்தியில் உள்ள சரயுநதியில் இறங்கி அனைத்து மக்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு புறப்பட தயாரானார்.

- Advertisement -

அப்போது ஒருவரை தவிர மற்ற அனைவரும் ராமனோடு சேர்ந்து வைகுண்டம் செல்ல அவரோடு சேர்ந்து நதியில் நின்றனர் . அந்த ஒருவர்தான் அனுமன். இதை கண்ட ராமன், மாருதியே நீ என்னோடு வைகுடம் வரவில்லையா என்று கேட்டார்.

அதற்கு அனுமன், வைகுண்டத்தில் அனைத்துவிதமான இன்பங்களும் இருக்கிறது அனால் ராம நாமம் இல்லையே. எனக்கு என்றும் இன்பம் தருவது ராம நாமம் மட்டுமே. ஆகையால் ராம நாமத்தை சொல்லிக்கொண்டு நான் பூலோகத்திலேயே இருந்துவிடுகிறேன் என்றார். இன்று வரை ஆஞ்சநேயர் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக தான் நம்பிக்கை.

- Advertisement -