நாம் பருகும் சாதாரண தண்ணீர், ஆன்மீகத்தில் மட்டும் எப்படி புனித தீர்த்தம் ஆகிறது?

தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக நாம் தண்ணீரை குடிக்கின்றோம். கோவில்களில் கொடுக்கும்போது அது எப்படி புனிதமான தீர்த்தமாகிறது. கும்பாபிஷேக சமயத்தில் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே தெளிக்கப்படும் தீர்த்தம், நம் மீது படவேண்டும் என்று நாம் ஏன் நினைக்கின்றோம். நம் வீட்டுப் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைப்பதற்கு காரணம் என்ன? பஞ்ச பாத்திரத்தில் வைக்கும் நீரோடு சேர்த்து சிலர் செம்பு கலசத்தில் (சொம்பில்) தண்ணீரை முழுமையாக நிரப்பி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம்? இதற்கான விடைகளையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு.

பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு எந்த ஒரு மந்திரத்தையும், நல்ல சக்தி ஆனாலும் சரி, கெட்ட சக்தி ஆனாலும் சரி அதை ஈர்க்கும் சக்தியானது அதிகமாகவே உள்ளது. இதற்காகத்தான் யாகங்கள், ஹோமங்கள், நடத்தப்படும் சமயங்களில் செம்பினால் செய்யப்பட்ட கலசத்திலோ அல்லது பித்தளையால் செய்யப்பட்ட கலசத்திலோ உள்ளே நீரை நிரப்பி, அந்தச் கலசத்தின் மேல் நூலை சுற்றி வைத்து மந்திரத்தை ஓதுவார்கள். புரோகிதர்கள் ஓதப்படும் மந்திரமானது நீரினுள் ஈர்க்கப்படும். மந்திரத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றல் முழுவதும் கலசத்தில் உள்ள நீரின் உள் அடங்கிவிடும். சாதாரண தண்ணீரானது, மந்திரங்களின் நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி தீர்த்தமாக மாறுகிறது. இதனால்தான் கும்பாபிஷேக சமயத்தில் வேதங்கள் ஓதப்பட்டு கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தத்தை எல்லோர் மீதும் படும்படி தெளிக்கின்றார்கள். அந்த தண்ணீர் நம்மீது படும்போது, அந்த நேர்மறை ஆற்றலை நாமும் உள்வாங்கிக் கொள்கின்றோம். பொதுவாகவே செம்புக்கும், பித்தளைக்கும் ஆற்றலை ஈர்க்கும் சக்தியானது இயற்கையாகவே உள்ளது. இதனால்தான் செம்பு, பித்தளை பாத்திரங்களை தெய்வ காரியங்களுக்கு உபயோகப் படுத்துகிறார்கள். பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்திற்கும் இது பொருந்தும்.

நம் வீட்டில் பூஜை அறையில் வைக்கப்படும் தண்ணீரில் நாம் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் ஈர்க்கப்படுகிறது. இதனால்தான் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்போது எனக்கு ‘நிம்மதியான வாழ்க்கை வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நேர்மறையாக வேண்டிக் கொள்ள வேண்டும்’. இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது எதிர்மறையாக எதையும் மனதில் வைத்து வேண்டிக் கொள்ளக்கூடாது. அதாவது ‘இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து நேர்ந்து விடுமோ, பிரச்சனைகள் ஏதாவது எனக்கு வந்து விடுமோ, மற்றவர்களால் கெடுதல் ஏற்பட்டுவிடுமோ’ இப்படி கெட்டதாக எதையும் நினைத்துக் கொள்ளக்கூடாது.

Kalasam

நீங்கள் மனதார நினைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்தால் கூட அந்த நேர்மறை ஆற்றலானது அந்த தண்ணீருக்குள் சென்று விடும். அது ஓம்நமசிவாய மந்திரமாக இருக்கலாம் அல்லது ஸ்ரீராமஜெயமாக இருக்கலாம், ஓம் நமோ நாராயண என்ற மந்திரமாகவும் இருக்கலாம். என்னவாக இருந்தாலும் நீங்கள் எண்ணும் எண்ணங்கள் நேர்மறையாக இருப்பது நல்லது. நீங்கள் உங்களது வேண்டுதல்களை வைத்த பின்பு அந்த தண்ணீரில் இருந்து சிறிதளவு எடுத்து தீர்த்தமாக பருகினால் அது மிகவும் நல்லது. நீங்கள் வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தியானது இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இதனால்தான் தண்ணீரை ஆன்மீகத்தில் தீர்த்தம் என்று புனிதமாக கூறுகிறார்கள்.

- Advertisement -

kamandalam

அந்த காலத்தில் முனிவர்கள் எல்லாம் ஒரு கமண்டலத்தில் நீரை வைத்திருப்பார்கள். ஒருவரை சபிப்பதாக இருந்தாலும், கையில் நீரை ஊற்றி விட்டு ஏதோ ஒரு மந்திரத்தைக் கூறி தெளிப்பார்கள் அது பலித்துவிடும். ஒருவரை ஆசீர்வாதம் செய்வதாக இருந்தாலும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி தெளிப்பார்கள் அதுவும் பலித்துவிடும். அவர்களது மந்திர சக்தியை அந்த ஒரு வினாடிக்குள் அந்த தண்ணீர் உட்கொண்டு விடுகிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். இப்போது புரிகிறதா தண்ணீர் எப்படி புனிததீர்த்தமாக மாறுகிறது என்று..

இதையும் படிக்கலாமே
அபசகுனம் என்று எண்ணி இவர்களை யாரும் இனி ஒதுக்காதீர்கள். ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பாவம் பின் தொடரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Punitha theertham in Tamil. Kalasa theertham benefits in Tamil. Punitha theertham nanmaigal in Tamil. Punitha theertham payangal in Tamil.