- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய வெற்றி ஏற்பட வேர் பரிகாரம்

காரிய வெற்றி ஏற்பட வேர் பரிகாரம்

- Advertisement -

அன்றைய காலத்தில் ஒரு நல்ல காரியத்திற்காக வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது சகுனம் பார்க்கும் பழக்கம் இருக்கும். நல்ல சகுனமாக வந்தால் கிளம்புவார்கள். இல்லையெனில் சிறிது நேரம் இருந்து நல்ல சகுனம் வந்த பிறகு கிளம்புவார்கள். இதோடு மட்டுமல்லாமல் எந்த திசையில் நாம் செல்கிறோம் அந்த அன்றைய நாளில் அந்த திசையில் சூலம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். தினசரி காலண்டரில் பின்புறத்தில் இதை பார்க்கலாம். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு திசை சூலமாகவும் பரிகாரத்திற்கு எந்த பொருளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் போட்டு இருக்கும்.

சூலம் இருக்கும் திசை பக்கம் போகக் கூடாது என்றும் அவ்வாறு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பரிகாரத்தில் சொல்லப்பட்ட பொருளை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதன்படி நாம் சென்றோம் என்றால் நாம் செல்லும் காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. ஒரு காரியத்தை நாம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது எந்த அளவுக்கு சரியாக ஆரம்பிக்கிறோமோ அந்த அளவிற்கு அந்த காரியத்தில் நமக்கு வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

அப்படி நாம் சரியாக ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த சகுனங்கள், சூலம் போன்றவற்றை நாம் பார்ப்போம். இதை தவிர்த்து ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு விதமான ஈர்ப்பு விசை என்பது இருக்கும் அது அந்தந்த இடத்திற்கு பொருத்தவாறு மாறுபடும். இப்படி நாம் எந்த திசையில் சென்றாலும் அந்த திசையில் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காரிய வெற்றி ஏற்பட பரிகாரம்

அன்றைய காலத்தில் மன்னர்கள் தங்களுடைய அரசாட்சியை விரிவு படுத்துவதற்காக எட்டு திசைகளிலும் செல்வார்கள். அப்படி செல்லும் பொழுது அவர்களுக்கு வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அரண்மனையை விட்டு கிளம்பும்பொழுது அவர்களுக்கு வெற்றி திலகம் இடும் வழக்கம் இருந்து வந்தது. இந்த திலகத்தில் அதிகப்படியாக சேர்க்கக் கூடிய பொருள் என்று பார்த்தால் அது மஞ்சள் தான்.

- Advertisement -

மங்களகரமான பொருளான மஞ்சளை நாம் நம்முடைய நெற்றியில் தினமும் வைத்துக் கொள்வதன் மூலம் குரு பகவானின் அருள் கிடைப்பதோடு எந்தவித காரியத் தடையும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மஞ்சளை நாம் நெற்றியில் வைத்துக்கொள்ள யோசித்தாலும் விரலி மஞ்சளாக எடுத்து நம்முடனே வைத்துக் கொண்டாலும் நமக்கு காரிய வெற்றி ஏற்படும். காரிய வெற்றிக்கு விரலி மஞ்சள் ஒன்று போதும்.

ஆனால் திசைகளில் இருக்கக்கூடிய தடைகளை நீக்குவதற்கு இந்த விரலி மஞ்சள் உடன் ஒரு வேர் வேண்டும். அந்த வேர் தான் குப்பைமேனி செடியின் வேர். இந்த குப்பைமேனி செடி அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு செடிதான். இதற்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது போல் மகத்துவ மிகுந்த வசியத்திற்கும் இந்த செடியை பயன்படுத்தலாம்.

- Advertisement -

சிறிய செடியாக பார்த்து அதற்கு தண்ணீர் ஊற்றி அது நன்றாக ஊறிய பிறகு “நசி நசி மூலிகை சாப நசி” என்று ஒன்பது முறை கூறிவிட்டு அந்த செடியை வேருடன் பறித்து அந்த வேரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த வேரை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி விட்டு நாம் எடுத்து வைத்திருக்கும் விரலி மஞ்சள் உடன் சேர்த்து ஒரு மஞ்சள் நிற துணியில் சுற்றி நம்முடைய பாக்கெட்டிலோ அல்லது பர்சிலோ வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேலை வாய்ப்பை அள்ளித் தரும் முருகன் வழிபாடு

இப்படி வைத்து விட்டு நாம் எந்த திசை பக்கம் சென்றாலும் அந்த திசைகளில் எல்லாம் நமக்கு வெற்றிகள் மட்டுமே தான் கிடைக்கும். இந்த மூலிகை பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இதைப் பின்பற்றி செல்லும் திசையெல்லாம் வெற்றிகளை குவிக்கலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.

சற்று முன்