மந்திர தியானம் செய்யும் பொழுது இதை கடைபிடிக்க மறந்து விடாதீர்கள்! அப்புறம் பலன்கள் கிடைக்காது.

thiyanam-jebam

தியானம் செய்வது ஆத்ம திருப்தியும், ஞானமும் வளர்வதற்கு தான். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து மந்திர ஜெபம் செய்வது நமக்குள் அவ்வளவு அருமையான மாற்றத்தை கொடுக்கும் தெரியுமா? இதை செய்பவர்களுக்கு நன்றாகவே புரியும். இதுவரை செய்யாதவர்களும் இந்த பதிவை படித்தால் மந்திர ஜபம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எழும். இன்றைய சூழலில் பல விஷயங்களில் மனம் அலை பாய்வது தடுக்க மந்திர ஜெபம் பேருதவியாக உங்களுக்கு நிச்சயமாக இருக்கும்.

jebam-thiyanam

உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக அமையும் தீய விஷயங்களை உங்களிடம் இருந்து நீக்கி, உங்களை நல்ல பாதைக்கு கொண்டு செல்லும். எனவே மந்திர ஜபம் செய்வது எவ்வளவு நல்லது என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். மந்திர ஜெபம் செய்யும் பொழுது கைகளில் ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்துவது வழக்கம். தாமரை மணிமாலை, ஸ்படிக மணி மாலை போன்றவையும் ஜெபம் செய்ய சிறந்ததாக இருந்து வருகிறது. எனவே ஜெபம் செய்வதற்கு கைகளில் பிரத்தியேக ஆன்மீக சம்பந்தப்பட்ட மணி மாலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி மந்திர ஜெபம் செய்யும் பொழுது உங்கள் கைகளில் இருக்கும் மாலையை உங்களுடைய வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல் மட்டுமே அழுத்தும் படியாக பிடித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் ஒரு பயனும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மாலை வைத்து ஜபம் செய்பவர்கள் ஆள்காட்டி விரலை பயன்படுத்தக் கூடாது.

rudratcham-thiyanam

அதுபோல் கட்டாயம் 108 என்ற எண்ணிக்கையில் மாலைகள் அமைந்திருப்பது மட்டுமே உண்மையில் நல்ல மாலைகளாக கூறப்படுகிறது. இந்த மணி மாலையில் 108 என்ற எண்ணிக்கையில் புள்ளிகள் அமைந்திருந்தால் மிகவும் நல்லதாகும். 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது. இந்த புள்ளிகள் ஒவ்வொன்றும் தூண்டப்பட்டு நட்சத்திரங்களை பிரிக்க 108 பாகங்கள் தேவைப்படுகிறது.

- Advertisement -

109 ஆக இருப்பது கிருஷ்ண மணி என்று சொல்வதுண்டு. இறுதியாக வரும் முடிச்சுப் போடும் இடத்தில் இருக்கும் இந்த மணியை தாண்டக்கூடாது. மீண்டும் மாலையை திருப்பி ஜெபிப்பது முறையாகும். பொதுவாகவே ஜெபம் செய்யும் பொழுது ஜெப மாலை வெளியில் தெரியக்கூடாது. வெளியில் தெரியும்படியான சூழ்நிலையில் ஜெபம் செய்யக் கூடாது. ஏதாவது ஒரு துணி அல்லது அங்கவஸ்திரம் கொண்டு மூடி இருக்க வேண்டும்.

hiding-jeba-malai

அதுபோல் ஜெபம் செய்யும் பொழுது வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. கம்பளித் துணி விரித்துக் கொள்ள வேண்டும் அல்லது தர்பை புல், தர்பை பாய் பயன்படுத்தலாம். இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்சாரம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவைகள் நம் உடலை விட்டு வெளியே செல்லாமல் தடுக்க இந்த இரு பொருள்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

குருவிடம் தீட்சை பெற்ற மந்திரங்களை சத்தமாக உச்சரிக்க கூடாது. இறைவனின் திருநாமாவளி மந்திரங்களை பாராயணம் செய்யும் பொழுது மட்டுமே உரக்க உச்சரிக்க வேண்டும் எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உச்சரிக்கும் மந்திரங்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியில் சொல்லக்கூடாது. இவ்வாறு செல்வதால் மந்திரங்கள் பலனளிக்காமல் போகலாம் என்பது நியதி.

munivar

அதுபோல் ஜெபம் செய்யும் பொழுது பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் இவைகளில் ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொள்வது மிக மிக நல்லது. மந்திரங்கள் சொல்லும் பொழுது சில இடங்களை பார்க்க வேண்டும். அப்போது தான் பலன்களும் அதிகரிக்கும். பசுவின் பக்கத்தில் உட்கார்ந்து ஜபம் செய்வது நூறு மடங்கு பலனையும், நீங்கள் உங்களுடைய வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் கிடைக்கக் கூடிய பலனை விட ஆறு, குளம் போன்றவற்றில் அமர்ந்தால் 1000 மடங்கு பலனும், மலை மீது அமர்ந்தால் பத்தாயிரம் மடங்கும், கோவிலில் அமர்ந்தால் லட்சம் மடங்கும், குருவின் பாத கமலங்களில் அமர்ந்து ஜெபித்தால் கோடான கோடி பலன்களும் ஏற்படுவதாக மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தின் போதும் மந்திரம் ஜெபிப்பது அதிக பலன் தரும்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.