வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!

sana-pillaiyar

பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார் தெரியுமா? அவர் தான் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவான் விநாயகரை வழிபட்டு பதவி உயர்வு அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது.

sevvai

அதே போல நம்முடைய வாழ்க்கையிலும் அடுத்த நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து வைத்து இப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும். மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை செய்து நீங்களும் பயன்பெறலாம். அப்படியான இந்த வழிபாட்டை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அங்காரகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று தேய்பிறையில் விநாயகரை வழிபட துவங்க வேண்டும். எனினும் இந்த வழிபாட்டை மாசி மாதம் துவங்குவது மேலும் சிறப்பான பலன்களை தரும் என்று நூல்கள் குறிப்பிடுகிறது. தேய்பிறை செவ்வாய் அன்று விநாயகரை பொது இடத்தில் வைத்து அல்லது கோவில் தலங்களில் வைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை வீட்டில் வைத்து செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagar

விநாயகரை வழிபட பச்சரிசியை வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். பின்னர் அதனை இடித்து மாவாக்கி, தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து கொழுக்கட்டை பிடிக்க வேண்டும். இந்த கொழுக்கட்டையில் உப்பு சேர்க்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகரை பிரதிஷ்டை செய்ய சாணம் பிடிக்க வேண்டும். கன்று ஈனாத பசுஞ்சாணம் கொண்டு வந்து பிள்ளையார் பிடித்து வைத்து கொள்ள வேண்டும். பிள்ளையாருக்கு ஆசனமாக புளியமரத்து கொழுந்து அல்லது புங்க மரத்தின் கொழுந்து இவைகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை தட்டி மேடை போல் செய்து பிள்ளையாரை அதில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

- Advertisement -

பின்னர் விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல், எருக்கம் பூ போன்றவைகளை கொண்டு அலங்காரம் செய்து நீங்கள் நிவேதனமாக தயார் செய்த கொழுக்கட்டைகளை வாழையிலையில் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்வேத்தியம் செய்யும் பொழுது கண்டிப்பாக மணி ஓசை அடிக்க வேண்டும். இந்த பூஜையில் மட்டும் அல்ல, எந்த பூஜை நீங்கள் செய்வதாக இருந்தாலும் மணி ஓசையை எழுப்பிக் கொண்டே நைவேத்யம் படைப்பது முறையாகும்.

porana-kozhukattai3

மணி ஓசையில் மனம் ஒருநிலை படுவதாகவும், இறை நெறியில் முழு கவனம் செலுத்துவதற்கும் கூறப்படுகிறது. மேலும் மணி ஓசை சத்தத்தில் நிவேதனம் செய்யப்பட்ட பொருட்களை இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வார் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. கோவில்களில் மணி ஓசை ஒலிப்பதும் பக்தர்களின் மனம் ஒருநிலைப்பட்டு, சிரத்தையுடன் பக்தியை மேற்கொள்வதற்கும் தான். மேலும் துர்தேவதைகள் மணி ஓசை சத்தத்தில் விலகுவதாக ஐதீகம் உள்ளது.

kovil mani

வீட்டில் மணி ஓசையுடன் தீபாராதனை மற்றும் நைவேத்தியம் செய்வது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை விரட்டி அடிக்கும். மணி ஓசையை வேறு எந்த நேரத்திலும் எழுப்பக்கூடாது. அதாவது தீபாராதனை மற்றும் நெய்வேத்தியம் செய்யும் பொழுது மட்டுமே மணி ஓசை எழுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடம் வரை இது போல் தேய்பிறை செவ்வாயில் விநாயகருக்கு பூஜை செய்து வர வாழ்க்கையில் அடுத்தகட்ட நிலைக்கு நிச்சயம் செல்வீர்கள் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கஷ்டங்கள் குறைந்து கிரக தோஷம் நீங்க ஒவ்வொருவரும் இந்த 12 தானத்தை கட்டாயமாக செய்தேயாக வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.