- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்தங்க நகைகளை சுத்தம் செய்ய எளிமையான வீட்டு குறிப்புகள்

தங்க நகைகளை சுத்தம் செய்ய எளிமையான வீட்டு குறிப்புகள்

- Advertisement -

பொதுவாகவே பெண்கள் தினம்தோறும் அணியக்கூடிய தங்க நகைகளின் ஜொலி ஜொலிப்பு குறைவாகத்தான் இருக்கும். தினமும் நாம் பயன்படுத்தும் சோப்பு, மஞ்சள், பவுடர் எல்லாம் அந்த தங்க நகைகளில் சேர்ந்து சேர்ந்து பார்ப்பதற்கு மங்கிப்போய் இருக்கும். இதை கடையில் கொடுத்து தான் சில பேர் பாலிஷ் போடுவார்கள்.

ஆனால் அப்படி செய்வது நம்முடைய தங்கத்திற்கு நிறைய சேதாரத்தை உண்டு பண்ணும். தங்கம் தேய்மானம் ஆகும். வீட்டில் இருந்தபடியே தங்க நகைகளை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி பழைய தங்க நகைகளை புதுசாக மாற்ற எளிமையான வீட்டு குறிப்பு இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

தங்க நகைகளை எளிமையாக சுத்தம் செய்ய குறிப்பு 1

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துணி துவைக்க பயன்படுத்தக்கூடிய லிக்விட் 1 ஸ்பூன் அளவு ஊற்றி, இதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து பழைய தங்க நகைகளை இதில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறும்போதே நகைகளில் இருக்கும் பாதி அழுக்கு நீங்கிவிடும்.

பல் தேய்க்கும் ஒரு பிரஷ் கொண்டு இந்த நகைகளை லேசாக தேய்த்துக் கொடுத்தால் நகைகள் பளபளப்பாக மாறிவிடும். சுத்தமான நல்ல தண்ணீரில், இரண்டு முறை இந்த தங்க நகைகளை நன்றாக கழுவி விட்டு ஒரு காட்டன் துணியில் துடைத்து பாருங்கள். உங்கள் பழைய தங்கம் புதுசு போல ஜொலிக்க தொடங்கிவிடும்.

- Advertisement -

ஒருவேளை கல்லு வைத்த நகைகளை இப்படி சுத்தம் செய்வதாக இருந்தால் மஞ்சள் பொடி சேர்க்க வேண்டாம். வெறும் சுடுதண்ணீரில் டிஷ்வாஷ் லிக்விட் சேர்த்து நகைகளை ஊற வைத்து, பிரஷ் போடாமல் வெறும் தண்ணீரில் நகைகளை அலசி கழுவிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (அழுத்தமாக பிரஷ் போட்டால் நகைகளில் இருக்கும் கல் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  தேவைப்பட்டால் லேசாக அந்த நகைகளுக்கு மேலே பிரஷ் போட்டுக் கொள்ளலாம்.)

குறிப்பு 2

இதிலும் கம்பல், மூக்குத்தி மாட்டல் போன்ற நகைகளை சுத்தம் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். இதில் திருகாணியின் இடுக்குகளில் எல்லாம் கருப்பு நிறத்தில் அழுக்கு போய் படிந்திருக்கும். இதை எளிமையாக சுத்தம் செய்ய இன்னொரு குறிப்பு இருக்கிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

தண்ணீர் நன்றாக கொதி வந்ததும், அதில் ஆப்ப சோடா 1/4 ஸ்பூன் போட்டு, கொதிக்கின்ற தண்ணீரிலேயே, இப்படி ரொம்பவும் அழுக்கப்படிந்த நகைகளை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்து, இந்த சுடுதண்ணீரில் இருக்கும் நகைகளை ஒரு தட்டு போட்டு, மூடி வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து இந்த நகைகளை எடுத்துப் பார்த்தால் அதில் இருக்கும் அழுக்கு எல்லாம் தண்ணீரிலேயே போயிருக்கும்.

இதையும் படிக்கலாமே: வாஷிங் மெஷின் லிக்விட் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

பிரஷ் போட்டு தேய்த்து இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை எடுக்க கஷ்டப்படத் தேவையை இருக்காது. பிறகு அந்த தண்ணீரை வெறும் தண்ணீரில் அலசி துடைத்து போட்டுக் கொள்ளவும். எளிமையான இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்