கார்த்திகை தீபத்திற்கு ஏற்றி வைத்த எல்லா மண் அகல் விளக்குகளையும், எண்ணெய் பிசுபிசுப்பு போக, கைபடாமல் 5 நிமிடத்தில் எப்படி சுத்தம் செய்வது?

deepam11
- Advertisement -

சில நாட்களுக்கு முன்பாகத்தான் கார்த்திகை தீபம் முடிந்தது. நம் எல்லோரது வீட்டிலும் மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து இருப்போம். கட்டாயமாக குறைந்தபட்சம் ஒரு 11 அகல் விளக்கையாவது நம் வீட்டில் ஏற்றி வைத்து இருப்போம் அல்லவா? இந்த மண் அகல் விளக்குகளை எண்ணெய் பிசுக்கு போக, நாம் வைத்த மஞ்சள் குங்குமம் போக சுத்தம் செய்து மீண்டும் எடுத்து வைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஒவ்வொரு அகல் விளக்கை எடுத்து துணியால் துடைத்து எடுத்து வைத்தாலும் அதில் உள்ள எண்ணெய் பிசுக்கு முழுமையாக நீங்காது.

karthigai-deepam1

ஆனால் ஒரு சுலபமான முறையில் கஷ்டப்படாமல் அந்த மண் அகல் விளக்குகளை எல்லாம் சுத்தப்படுத்தி விடலாம். ஒரு துளி எண்ணெய் பிசுக்கு கூட இல்லாமல். அதுவும் கையில் தேய்க்காமலேயே! அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் முக்கால் பாகம் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். அதாவது 11 அகல் விலக்கு இருக்கின்றது என்றால், அந்த விலங்குகள் மூழ்கும் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

vilaku1

கொதிக்கின்ற தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் சோடா உப்பு, 1 ஸ்பூன் வாஷிங் பவுடர், துணி துவைக்கும் பவுடர், துணி துவைக்கும் லிக்விட், அல்லது பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் எது வேண்டுமென்றாலும் நீங்கள் அந்த தண்ணீரில் ஊற்றிக் கொள்ளலாம். ஆனால் அடுப்பை அணைக்க கூடாது. தண்ணீர் கொதித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் போட்ட பவுடரும், சோடா உப்பும் அந்த தண்ணீரில் நன்றாகக் கரைந்து இருக்க வேண்டும்.

- Advertisement -

கொதிக்கின்ற அந்த தண்ணீரில் எண்ணெய் பிசுக்கு படிந்த அகல் விளக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு விடுங்கள். போட்ட உடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பிலிருந்து பாத்திரத்தை பத்திரமாக கீழே இறக்கி வைத்து விட்டு, ஒரு மணி நேரம் வரை அப்படியே விடுங்கள். அந்த தண்ணீரும் ஆறிவிடும். அகல்விளக்கு இருக்கக்கூடிய பிசுபிசுப்பும் அந்த தண்ணீரில் வந்திருக்கும். பின்பு அழுக்கு படிந்த அந்த தண்ணீரில் இருந்து ஒவ்வொரு அகல் விளக்காக எடுத்து, மற்றொரு பாத்திரம் நிரம்ப நல்ல தண்ணீரை வைத்து அதில் போட்டு கழுவி விளக்கை எடுத்துப் பாருங்கள்.

hot-water

நம்பவே மாட்டீர்கள். ஒரு துளி எண்ணெய் பிசுபிசுப்பு கூட இருக்காது. சுத்தமாக போயிருக்கும். அதன் பின்பு எல்லா விளக்குகளையும் கவிழ்த்து, நிமித்தி வெயிலில் உலர வைத்து, ஒரு டப்பாவில் சேகரித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த வருடம் தீபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

vilaku

ஆனால், இந்த முறையில் சுத்தம் செய்தாலும் கூட, தீபம் எறிந்த இடத்தில் இருக்கும் கருநிறம் முழுமையாக நீங்காது. அது கொஞ்சம் இருக்கும். துண்டை வைத்து அழுத்தி துடைத்து எடுத்து பாருங்கள். முக்கால்வாசி அந்த கருநிறம் போகுமே தவிர, கருப்பு நிறம் மட்டும் சுத்தமாக போகாது. மற்றபடி எண்ணெய் பிசுக்கு முழுமையாக நீங்க 100% கேரன்டி. முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -