பெரும்பாலும் நம்மில் எல்லோர் வீட்டிலும் ஒரு சோபா ஹாலில் இருக்கும். வாங்கிய புதுசில் அதை பார்த்து பார்த்து சுத்தம் செய்து பக்குவமாக பயன்படுத்துவோம். ஒரு வருடம் கழித்து அந்த சோபாவை பார்த்தால் அத்தனை மோசமாக அசுத்தமாக இருக்கும். குறிப்பாக சின்ன குழந்தைகள் இருந்தால் கேட்கவே வேண்டாம். ஹாலில் இருக்கும் சோபாவின் கதை முடிந்தது. இப்படி அழுக்கு படிந்த சோபாவை வாக்யூம் கிளீனர் வைத்து சுத்தம் செய்வது சுலபம். எல்லோர் வீட்டிலும் வாக்யூம் கிளீனர் இருக்குமா. வாக்யூம் கிளீனர் உங்க வீட்டில் இல்லை என்றாலும் சோபாவை எளிமையான முறையில் சுத்தம் செய்து பராமரிப்பது எப்படி என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
சுலமாக சோபாவை சுத்தம் செய்யும் முறை:
ரொம்பவும் லைட் கலர் சோஃபா, சீக்கிரம் அழுக்கு தெரியும் என்றால் சோபாவை வாங்கியவுடன் அதன் மேலே கவர் போடுவது ரொம்ப ரொம்ப நல்லது. கவர் போடாமல் பயன்படுத்தினால் விலை அதிகமாக கொடுத்து வாங்கிய சோபா ஒரு சில நாட்களிலேயே வீணாக போய்விடும். அடுத்தபடி வாரத்திற்கு ஒரு முறை சோபாவுக்கு மேலே ஒரு குச்சியை வைத்து அடித்து தூசு நீக்கி கொண்டே இருக்க வேண்டும். தூசி அதிகமாக படிந்து விட்டால் சோபாவில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கிவிடும்.
கூடுமானவரை உணவுப் பொருட்களை சோபாவில் சிந்துவதை தவிர்த்துக் கொள்ளவும். எறும்பு போன்ற மற்ற பூச்சிகள்சோபாவில் சேருவதற்கு இதுவும் ஒரு காரணம். நீங்க மேலே சொன்ன எல்லா பிரச்சனையும் எங்க சோபாவில் இருக்கிறது. தூசி படிந்து, அழுக்கு படிந்து, கறை படிந்து, எரும்பு தொல்லையோடு இருக்கிறது இதை எப்படி சுத்தம் செய்வது.
ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன், வினிகர் 1/4 கப், பல் தேய்க்கும் பேஸ்ட் 1 பெரிய ஸ்பூன், போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் ஊற்றி கலக்கக்கூடாது. தேவையான அளவு வினிகர் ஊற்றி தான் லிக்விட் பததில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசல் அப்படியே இருக்கட்டும்.
உங்கள் வீட்டு சோபாவில் இருக்கும் தூசியை முதலில் நீக்கி விட வேண்டும். ஒரு குச்சி வைத்து தட்டினால் தூசி அனைத்தும் கொட்டும். அப்படி சுத்தம் செய்யலாம். அப்படி இல்லை என்றால் பிளாஸ்டிக்கில் துணி துவைக்கும் பிரஷ் இருக்கும் அல்லவா, அந்த பிரஷை எடுத்து சோபாவை லேசாக தேய்த்து கொடுத்தால் அதில் இருக்கும் தூசு அனைத்தும் வெளியேறிவிடும்.
அதன் பிறகு ஒரு தடிமனான காட்டன் துணியில் தயார் செய்து வைத்திருக்கும் லிக்விடை தொட்டு தொட்டு உங்கள் சோபாவை துடைத்து எடுக்க வேண்டும். (இல்லையென்றால் பச்சை நிற ஸ்பாஞ்ச் ஸ்க்ரப்பையும் சோபாவை துடைக்க பயன்படுத்தலாம்). சோபாவில் இருக்கும் அழுக்கு முழுவதும், துடைக்கும் துணியில் ஒட்டிக்கொண்டு வந்துவிடும். இறுதியாக வெதுவெதுப்பான தண்ணீரில் நல்ல துணியை நனைத்து சோபா முழுவதையும் துடைத்து விட்டால் சோபாவில் இருக்கும் கறைகள் அனைத்தும் நீங்கி சோபா புதுசு போல மாறிவிடும்.
நல்ல வெயில் அடிக்கும் நேரத்தில் சோபாவை இப்படி துடைத்து விடுங்கள். சோபாவில் இருக்கும் ஈரம் சீக்கிரம் காய்ந்து போய்விடும். சோபாவில் துர்நாற்றம் வீசாது. பூச்சி தொந்தரவு இருக்காது. சோபா புத்தம் புதுசு போல பள பளப்பாக மாறிவிடும். இது எளிமையான குறிப்பு தான். ஆனால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு சோபாவில் இருக்கு அழுக்கு நிச்சயம் நீங்கும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பார்க்கலாம்.