என்னது! அஞ்சே நிமிஷத்துல சாதத்தை குழையாமல் உதிரி உதிரியா வடிக்கலாமா? அட கேஸ் விக்கிற விலைக்கு இத தான் நாம முதல்ல தெரிஞ்சுக்கணும். பணம், நேரம் இரண்டையும் மிச்சப்படுத்த சூப்பர் ஐடியா.

COOKER RICE
- Advertisement -

இப்போதெல்லாம் பெரும்பாலான சமையல்கள் குக்கரிலேயே செய்து விடுகிறார்கள். சாதம் வடிப்பது முதல் பருப்பு வேக வைப்பது, காய்கறிகள் வேக வைப்பது என முக்கால்வாசி சமையல் குக்கரில் தான் செய்கிறோம். மற்ற சமையல்களை குக்கரில் செய்தாலும் கூட, இந்த சாதம் வடிப்பதை குக்கரில் செய்ய கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கிறது. குக்கரில் வடிக்கும் போது தண்ணீரை வடிக்க முடியாது. இதனால் சக்கரை வியாதிக்காரர்கள் சாப்பிட முடியாது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.

இதையெல்லாம் நன்றாக தெரிந்தாலுமே கூட, இன்றைய அவசர காலக்கட்டத்தில் நாம் பொறுமையாக சாதத்தை கொதிக்க வைத்து வடித்து செய்ய நேரம் இருப்பதில்லை. எனவே தான் இந்த முறையை நாம் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறோம். இப்பொழுது அதே குக்கரில் ஐந்தே நிமிடத்தில் சாதத்தை குழையாமல் உதிரி உதிரியாக வடிப்பதுடன், கஞ்சி தண்ணீரையும் வடித்து விடலாம் என்பது தான் ஆச்சர்யமான தகவல். அது எப்படி என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குக்கரில் சாதம் குழையாமல் உதிரி உதிரியாக வடிப்பது எப்படி:
முதலில் ஒரு டம்ளர் சாப்பாடு அரிசியை ஒரு பவுலில் ஊற்றி முதலில் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை ஊற விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சாதம் வடிக்க எந்த குக்கரை பயன்படுத்திவீர்களோ அந்த குக்கருக்குள்ளே பொருந்தும்படியான ஒரு சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றிய பிறகு பாத்திரத்தில் முக்கால் பாகம் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து இந்த எண்ணெய் ஊற்றிய தண்ணீரில் சேர்த்து விடுங்கள். இப்போது குக்கரில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் (இதற்கு தண்ணீர் அளவு சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) ஊற்றிய பிறகு, இந்த அரிசி தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தை எடுத்து குக்கரின் உள்ளே வைத்து அப்பொழுதே மூடியும் போட்டு விசிலும் போட்ட பிறகு அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து விடுங்கள். இப்படி வைக்கும் போது குக்கர் மீடியம் ஃப்ளேமில் இருக்கட்டும். ஐந்து நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு குக்கரை திறந்த உள்ளே இருக்கும் பாத்திரத்தில் சாதம் வெந்து உதிரி உதிரியாக இருக்கும்.

- Advertisement -

அதன் பிறகு அந்தப் பாத்திரத்தை ஒரு துணி வைத்து வெளியில் எடுத்து மீதம் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டால் நாம் எப்போதும் வடித்து சாப்பிடும் சாதம் போலவே கஞ்சி எதுவும் சுற்றாமல் நல்ல உதிரி உதிரியாக சாதம் இருக்கும். ஒரு வேளை நீங்கள் ஐந்து நிமிடம் கழித்து குக்கரை திறக்கும் போது சாதம் வேகாதது போல் உங்களுக்கு தோன்றினால் மீண்டும் ஒரு இரண்டு நிமிடம் கூட இப்படி வைக்கலாம் ஒன்றும் ஆகாது.

இந்த முறையில் சாதம் வடிக்க அரிசியை ஊற வைக்காமல் செய்தாலும் இதே ஐந்து நிமிடத்தில் சாதம் வெந்து கிடைக்கும். இதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள் விரைவாக செய்வதுடன், இனி சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட குக்கரில் இது போல சுலபமாக சாதம் வைத்து சாப்பிடலாம் எந்த பிரச்சனையும் வராது. நாம் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சமைப்பதால் குக்கரில் சாதம் எங்கும் ஒட்டி இருக்காது எனவே குக்கரை தேய்க்கும் வேலை கூட இருக்காது.

இதையும் படிக்கலாமே: இனி மணிக்கணக்கா கிச்சனிலேயே நிக்காம சட்டுன்னு வேலையை முடிச்சிட்டு, உங்க பொன்னான நேரத்தை மிச்சப்படுத்த அருமையான ஐடியா.

இந்த பதிவில் உள்ள குறிப்பு வீட்டில் உள்ள மற்றும் வேலைக்கு போகும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணு பாருங்க.

- Advertisement -