உங்க வீட்டு டீ ஃபில்டர் எப்பவுமே அழுக்காதா இருக்குமா? ஒருவாட்டி 5 நிமிஷம் நேரத்தை ஒதுக்கி இப்படி க்ளீன் பண்ணிதா பாருங்களேன்!

tea-filter
- Advertisement -

நம்முடைய வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும், ஒரு பயன்பாட்டிற்கு பின்பு, அழுக்கு ஆகத்தான் செய்யும். அதாவது என்னதான் அந்த பொருளை சுத்தப்படுத்தி வைத்தாலும், அதில் பிடித்திருக்கும் கறை சுத்தமாக நீங்காது. தினசரி பாத்திரம் தேய்க்கும் போது அதற்காக எக்ஸ்ட்ரா கேரை கட்டாயம் வீட்டிலுள்ள பெண்கள் எடுக்கத்தான் ஆக வேண்டும். அந்த வரிசையில் நம்முடைய எல்லோரது வீட்டிலும் தினசரி பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது டீ வடிகட்டி. எப்போதுமே கறைபடிந்த தான் இருக்கும் அல்லவா? இந்த டீ வடிகட்டியை முடிந்தவரை பிளாஸ்டிக்கில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

tea-filter1

இப்போதெல்லாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட டீ வடிகட்டி  கடைகளிலேயே சுலபமாக நமக்கு கிடைக்கின்றது. அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய வீட்டில் கறை படிந்த இந்த டீ வடிகட்டியை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரொம்ப ரொம்ப ஈசி மெத்தட் யூஸ் பண்ணி எப்படி சுத்தம் செய்வது பார்த்து விடலாமா?

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் முக்கால் பாகம் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். உங்களது டீ வடிகட்டி மூழ்கும் அளவிற்கு அந்த தண்ணீர் இருந்தால் போதும். அந்த சுடு தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் அளவு வாஷிங் சோடா போட்டுக் கொள்ள வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விடை 1 ஸ்பூன், அந்த சுடு தண்ணீரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

tea-filter2

அடுப்பில் தண்ணீர் கொதித்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் போட்ட வாஷிங் சோடாவும், பாத்திரம் தேய்க்கும் லிக்விடும் அந்த தண்ணீரில் நன்றாக கரைந்ததும், வடிகட்டியை அதன் உள்ளே வைத்துவிடுங்கள். ஐந்து நிமிடங்கள் வரை மிதமான தீயில், அந்த சுடுதண்ணீருக்குள் டீ வடிகட்டியும் சேர்ந்து கொதிக்கட்டும். டீ வடிகட்டியில் வாய்ப்பகுதி முழுகும் அளவிற்கு இருந்தால் கூட போதும்.

- Advertisement -

அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு, இரண்டு நிமிடங்கள் அந்த சுடுதண்ணீரிலேயே டீ வடிகட்டி ஊறட்டும். அதன் பின்பு ஒரு பல் தேய்க்கும் பிரஷால் பாத்திரம் தேய்க்கும் சோப்பை தொட்டு, டீ வடிகட்டியை லேசாக தேய்த்து கொடுத்தாலே போதும். உங்களுடைய டீ வடிகட்டி புதுசு போல பளபளப்பாக மாறிவிடும். (அடுப்பில் சுடுதண்ணி, அந்த சுடு தண்ணீரில் வாஷிங் சோடா, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்பு போட்டு, டீ வடிகட்டியை போட்டு கொதிக்க விட போகிறீர்கள் அவ்வளவு தான்.)

tea-filter3

இதை சுத்தம் செய்ய விம் லிக்விட், எக்ஸோ லிக்விட் போன்ற பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் லிக்விட் இல்லை என்றால் எலுமிச்சை பழச்சாறு பயன்படுத்தலாம். தவறொன்றும் கிடையாது. பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப், பவுடர் எதுவாக இருந்தாலும் கூட அதை கொஞ்சம் தண்ணீரில் போட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

washing-soda

இந்த டீ வடிகட்டியை சுத்தம் செய்ய வாஷிங் சோடா தான் போடவேண்டும். மளிகைக் கடைக்காரரிடம் கேட்டால் கொடுப்பார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பு வேறு. சுத்தப்படுத்துவதற்கான பயன்படுத்தும் வாஷிங் சோடா என்பது வேறு. வித்தியாசத்தை கேட்டு கடையிலிருந்து வாங்கி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! வடிகட்டி எப்பவுமே புத்தம் புதுசாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருக்கும் குப்பையை விட, புதுசா வாங்கின பூந்துடைப்பத்தால் வரும் புழுதியை சுலபமாக 5 நிமிடத்தில் சரி செய்ய என்ன வழி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -