வீட்டில் இருக்கும் குப்பையை விட, புதுசா வாங்கின பூந்துடைப்பத்தால் வரும் புழுதியை சுலபமாக 5 நிமிடத்தில் சரி செய்ய என்ன வழி?

broom-thudaippam3
- Advertisement -

வீட்டில் இருக்கும் குப்பையை சுத்தம் செய்ய விதவிதமான துடைப்பங்கள் விற்பனைக்கு இருந்தாலும், எவ்வளவு காசு கொடுத்து நாம் அதை வாங்கினாலும் அதை வாங்கி வந்த உடன் பயன்படுத்தவே முடியாது. அதில் இருக்கும் புழுதி போன்ற துகள்கள், நம் வீட்டில் இருக்கும் குப்பையை விட அதிகமாகவே இருக்கும். அதை சுத்தம் செய்யவே வீட்டை கூட்டி முடித்ததும், திரும்பவும் வேறு ஒரு பழைய துடைப்பத்தால் கூட்ட வேண்டிய நிலை இருக்கும். அந்த புது துடைப்பத்தை பக்குவப்படுத்தவே ஒரு மாதம் ஓடிப் போய்விடும். எனவே அதனை சுலபமாக எப்படி 5 நிமிடத்தில் சரி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

broom-thudaippam

வீட்டை பெருக்க உதவும் பூந்துடைப்பம், ஒரு வகையான புல் வகையை சார்ந்தது. கோரைப் புல்லில் செய்யப்படும் பூந்துடைப்பம் பெரும்பாலும் துடைப்ப தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூந்துடைப்பம் மெல்லிய புழுதி போன்ற குட்டி குட்டியாக இருக்கும் விதைகளை உதிர்த்து கொண்டே இருக்கும். இவைகளை நீக்கினால் தான் நமக்கு துடைப்பம் கிடைக்கிறது. ஆனாலும் அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் மீதமுள்ள துகள்களை ஒவ்வொருவரின் வீட்டிலும் கொண்டு வரப்பட்டு விடுகிறது.

- Advertisement -

நாம் வீட்டை கூட்டி பெருக்கும் பொழுது அதிலிருந்து பறக்கும் இந்த புழுதி தூசுகள் மூக்கிற்குள், தொண்டைக்குள் சென்று விட்டால் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் நம் உடம்பிலும், தலையிலும் ஒட்டிக் கொண்டு நமைச்சலை ஏற்படுத்துகிறது. பொதுவாக துடைப்பத்தில் இருந்து இதனை நீக்க கரடு முரடான தரையில் வைத்து தேய்ப்போம். அதிலேயே பாதி துகள்கள் வந்து விடுகிறது. ஆனால் எவ்வளவு தான் தேய்த்தாலும் முழுதாக நீங்குவதில்லை.

broom-cleaning

சிலர் இதனை சுவற்றில் தடவி, தட்டி தட்டி பார்ப்பார்கள். அப்பொழுதும் அவைகள் முழுமையாக நீங்கிய பாடில்லை. சரி இந்த தொல்லையில் இருந்து எப்படி தான் முழுதாக தப்பிப்பது? என்பதைத் தான் இனி பார்க்க இருக்கிறோம். புத்தம் புதிய பூந்துடைப்பத்தை வாங்கி வந்தவுடன் பல் தேய்க்கும் பிரஷ் அல்லது துணி துவைக்கும் பிரஷ் இவற்றைக் கொண்டு மூன்று நிமிடத்திற்கு எல்லா பக்கமும் நன்றாக தேய்த்து விட வேண்டும்.

- Advertisement -

தேய்கிறேன் என்கிற பெயரில் துடைப்பத்தை பிய்த்து விடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். லேசாகத் தேய்த்து விட்டாலே அதிலிருக்கும் புழுதியை உண்டாக்கும் மெல்லிய துகள்கள் நீங்கிவிடும். அதன் பிறகு தண்ணீரில் இரண்டு, மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் தண்ணீரிலேயே மீதி இருக்கும் துகள்களும் நீங்கி வந்துவிடும். அதன் பிறகு அதனை நன்கு வெயிலில் காய வைத்து பின்னர் பயன்படுத்தினால் இரண்டு நாட்களுக்குள் பழைய துடைப்பத்தை போல் தாராளமாக நாம் உபயோகிக்கும் நிலைக்கு வந்துவிடும்.

broom-thudaippam2

அப்புறம் என்னங்க பிரச்சனை? இனிமே புது துடைப்பம் வந்தாலும் பழைய துடைப்பத்தை தொட்டுக் கூட பார்க்க வேண்டாம். கடகடவென வீட்டை முழுவதுமாக ஐந்து நிமிடத்தில் கூட்டி பெருக்கி சுத்தம் செய்து விடலாம். சுத்தமான வீட்டில் தான் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். அது போல் துடைப்பத்தை யாருடைய கண்களுக்கும் தெரியாதவாறு கதவிற்கு பின்னால் ஆணி அடித்து மாட்டி விடுங்கள். தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம். கண்களுக்கு தெரியும்படி வைப்பதை தவிர்க்க பாருங்கள். அது தான் நல்லது.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரே 1 பொருளை மட்டும் வைத்துக் கொண்டு வீட்டில் இவ்வளவு விஷயங்கள் செய்ய முடியுமா? ஆச்சரியமா இருக்கே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -