ஏழரை சனியில் இருந்து தப்பிப்பதற்காக பரிகாரங்கள்

elarai-sani
- Advertisement -

பொதுவாக சனி பகவான் என்றாலே எல்லாருக்கும் ஒரு விதமான அச்சம் ஏற்படும். அதிலும் ஒருவருக்கு ஏழரை சனி என்றால் சொல்லவே தேவை இல்லை. இதற்கெல்லாம் காரணம், சனிபகவான் வெறும் துன்பத்தை மட்டும் தான் தருவார் என்ற நம்முடைய தவறான நம்பிக்கை தான்.

ஒருவருடைய எண்ணமும் செயலும் தவறாக இருந்தாலும், முன்வினை பாவங்கள் இருந்தாலும் மட்டுமே சனி பகவான் நமக்கு துன்பத்தை தருவார்.

- Advertisement -

ஒருவருடைய தவறுக்கு தண்டனை தரவேண்டியது சனிபகவானின் கடமை. அதையே அவர் செய்கிறார். சனியின் தாகத்தில் இருந்து எளிதில் விடுபட நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது.

இது தவிர சனிக்கிழமை தோறும் கோவிலிற்கு சென்று நாம் செய்த தவறுகளுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை மனமுருகி வணங்கி எள்தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் அவர் மனமிரங்கி நமது துன்பத்தை போக்குவார். அதோடு பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து வந்தால் சனியின் உக்கிரம் குறைந்து வாழ்வில் ஏற்றம் ஏற்படும்.

- Advertisement -