பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய திருமூலர் கூறிய வழி

thirumoolar1

திருமணமான சில மாதங்களில் புது மன தம்பதிகளை பார்த்து பலரும் கேட்க்கும் கேள்வி குழந்தை பிறப்பு பற்றி தான். ஆண் பெண் இருவருக்கும் பிறக்கும் குழந்தையின் பாலினமானது அவர்கள் இருவரும் இணைகையில் ஆணின் சுவாசத்தை பொறுத்துள்ளது என்கிறார் திருமூலர். அதோடு ஒரு குழந்தை ஊனத்தோடு பிறக்கிறது என்றால் அது தாயின் உடலை பொறுத்து என்கிறார் அவர். வாருங்கள் திருமூலர் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.

Thirumoolar

திருமந்திரம் – 482 :
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே

பாடலின் அர்த்தம்:
ஆண் பெண் இருவரும் இணைகையில்(கலவிக் காலத்தில்) ஆணின் சுவாசமானது வலது பக்கம் நடைபெற்றால் ஆண் குழந்தை பிறக்கும். ஆணின் சுவாசம் இடது பக்கம் நடைபெற்றால் பெண் குழந்தை பிறக்கும். அபானன் என்கிற எதிர் காற்று செயல்பட்டால் இரட்டை குழந்தை பிறக்கும். சுவாசம் தடைபட்டால் குழந்தை அலியாக பிறக்கும் என்கிறார் திருமூலர்.

குழந்தை சில ஊனங்களோடு பிறக்க திருமூலர் கூறும் காரணங்கள் குறித்த மந்திரம் மற்றும் அதன் விளக்கம் இதோ.

baby

- Advertisement -

திருமந்திரம் – 481 :
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

விளக்கம்:
தாயின் உதிரத்தில் தந்தையின் விந்து சேர்க்கயில், தாயின் வயிற்றில் மலம் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த புத்தியோடு பிறக்கும். தாயின் உதிரத்தில் தந்தையின் விந்து சேர்க்கயில், தாயின் வயிற்றில் சிறுநீர் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாக பிறக்கும். தாயின் உத்திரத்தில் விந்து சேர்க்கயில் மலம், சிறுநீர் ஆகிய இரண்டும் மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண்ணில்லை என்கிறார் திருமூலர்.

baby

இதையும் படிக்கலாமே:
ஆண் குழந்தை பிறக்க என்ன செய்யலாம்

ஒரு குழந்தை உருவாவது முதல் பல விடயங்களை திருமந்திரம் என்னும் நூலில் திருமூலர் விரிவாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் என்றும் இளமையோடு வாழ என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் கூறி உள்ளார். அது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.