ஒரு சொட்டு எண்ணெய் கூட குடிக்காமல் வத்தல், வடாம், அப்பளம் இவைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க முடியுமா? அது எப்படி?

vathal
- Advertisement -

பொதுவாகவே அப்பளம் பொரிப்பதை விட, வத்தல் வடாம் போன்ற பொருட்களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் நிறையவே எண்ணெய் குடிக்கும். குறிப்பாக கஞ்சி வத்தல், வீல் சிப்ஸ் குழந்தைகளுக்கு வகைவகையான பேட் வத்தல் குடல், போன்ற வடாம் வகைகளை எண்ணெயில் போட்டால் எண்ணெய் உடனே இழுத்துக் கொள்ளும். இந்த வத்தல்களை நிறைய எண்ணெயில் போட்டு பொரிக்கும் போது, எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்வது. ஈரப்பதம் உள்ள வத்தலை நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். இது முதல் குறிப்பு. பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

vathal1

குழந்தைகளுக்கு வகை வகையான வத்தல் வகைகளை வீட்டில் வாங்கி வைத்திருந்தாலும், அதை வெயிலில் அடிக்கடி காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது நன்றாக பொரிந்து வரும். இதுவும் எங்களுக்கு தெரியும்ங்க. சரி, தெரியாததையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்து, அதில் அரை ஸ்பூன் அளவு தூள் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதன் பின்பு வத்தலை போட்டு பொரித்து பாருங்கள். சாதாரண எண்ணெயில் பொரிப்பதற்கு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பதற்கும் உங்களுக்கு நன்றாகவே வித்தியாசம் தெரியும்.

வத்தலில் இந்த உப்பு ஒட்டிக் கொள்ளுமா, அந்த எண்ணெய்யை என்ன செய்வது, என்ற சந்தேகமும் வேண்டாம். அந்த எண்ணெயில் உப்பு கரையாது. எண்ணெயில் அடியிலேயே அப்படியே உப்பு தங்கிவிடும். மேலே இருக்கும் எண்ணெயை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டு, அடியில் இருக்கும் எண்ணெயை குழம்பு தாளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பிரச்சனையும் இல்லை. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

உப்பை வைத்து இன்னொரு டிபஸ் தெரிந்துகொள்வோம். பொதுவாக கல் உப்பை ஜாடியில் கொட்டி வைத்தாலும், சில சமயங்களில் அந்த உப்பு தண்ணீர் விட்டுப் போகும். உப்பு தண்ணீர் விடாமல் இருக்க ஒரு சிம்பிள் ஐடியா. ஜாடியில் முதலில் ஒரு கைப்பிடி அளவு அரிசியை போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் உப்பைக் கொட்டி வைத்தால், கல் உப்பு தண்ணீர் விடாமல், ட்ரை ஆகவே நீண்ட நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

salt

பிரியாணி குருமா வெரைட்டி ரைஸ் செய்யும் போது, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை, வெங்காயம் தக்காளியுடன் எண்ணெயில் சேர்த்து வதக்கி போது கடாயில், குக்கரின் அடியில், கட்டாயம் அந்த பேஸ்ட் ஒட்டத் தான் செய்யும். இஞ்சி பூண்டு பேஸ்டை கடாயில் போட்டு உடன், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கினால், இஞ்சி பூண்டு பேஸ்ட் அடிப்பிடிக்காமல் நன்றாக பச்சை வாடை போக வதக்கி விடலாம்.

triangle-chappathi1

சூடாக சப்பாத்தியை செய்து ஹாட் பேக்கில் போட்டு வைத்தால் அடியில் இருக்கும் சப்பாத்தி தண்ணீர் விடுவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. நாமும் பார்த்திருப்போம். நம் வீட்டு ஹாட் பேக்கில் அடியில் இருக்கும் சப்பாத்தி தண்ணீர் விட்டு போவதை. ஹாட் பேக்கின் அடியில் ஒரு சுத்தமான சிறிய அளவு காட்டன் துணியை வைத்து விட்டு, அதன் பின்பு சப்பாத்தியை மேலே போட்டு அடிக்கி, ஹாட் பேக்கில் மூடி வைத்தால் அடியில் இருக்கும் சப்பாத்தி வரை தண்ணீர் விடாமல் நன்றாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -