வீட்டில் பூஜை செய்யும் போது பூஜை முழுமை பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்..

நம் வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்யும் போது கட்டாயம் தீர்த்தம் வைக்க வேண்டும். பிரசாதமாக கண்டிப்பாக ஏதாவது படைக்க வேண்டும். இவை இரண்டும் இன்றி பூஜை செய்து ஒரு பலனும் இல்லை. உங்களால் முடிந்தது எதுவானாலும் வைக்கலாம். ஆனால் எதுவும் வைக்காமல் பூஜை செய்வது தவிர்த்து கொள்ள வேண்டிய ஒன்று. இறைவனை பூஜிக்கும் போது மனம் ஒன்றுபட வேண்டும். இறைவனை முழுமையாக உணர வேண்டும். அவசர அவசரமாக கடமையே என்று பூஜை செய்ய கூடாது. அவ்வாறு நேரம் இல்லை என்றால் நீங்கள் பூஜை செய்வதே தேவையற்றதாகிவிடும். செய்வதை திருந்த செய்தால் பலனும் பரிபூரணமாக கிடைக்கும் அல்லவா?

thulasi-theertham

பூஜையில் ஏன் தீர்த்தம் மற்றும் பிரசாதம் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்? இப்படி வைப்பதால் என்ன நன்மைகள் உண்டாகும்? என்ன வைக்கலாம்? என்று தான் இப்பதிவில் காண இருக்கிறோம்.

உங்களையும், உங்கள் வீ’ட்டை சுற்றியும் நல்ல சக்திகளும் இருக்கும். தீய சக்திகளும் இருக்கும். இரண்டுமே இருப்பது தான் பிரபஞ்சம். இரண்டில் எது உங்களை தேடி வர வேண்டும் என்று விரும்புவீர்கள்? நிச்சயம் நல்ல சக்திகள் தான் இல்லத்தில் இருக்க விரும்புவோம். இறையருள் இல்லாத இல்லத்தில் எப்படி நல்ல சக்திகள் வாசம் செய்யும்?

praying hand

பூஜை செய்யும் போது மட்டுமாவது மனதை இறைவனின் பக்கம் திருப்புங்கள். அவனின்றி அனுவும் அசையாது என்பதை உணர்ந்து பாருங்கள். உங்களின் எல்லா பிரச்சனைக்கும் எங்கெங்கோ தீர்வு தேடி அலைந்து கொண்டு இருக்கிறீர்கள். தீர்வு இறைவனின் இருக்கும். பிரச்சனைக்கு காரணமும் அவன் தான். தீர்வும் அவன் தான். தினமும் ஒரு இருபது நிமிடம் இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள். உண்மையை கூறினால் அது இறைவனுக்கான நேரம் கூட அல்ல. உங்களின் மனதை புத்துணர்ச்சி பெற செய்வதற்குரிய சந்தர்ப்பமாக எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சதா பிரச்சனை, கவலை என்று மனதை போட்டு வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறோம். மனதை ஆசுவாசபடுத்த இந்த நேரம் போதுமானதாக நிச்சயம் இருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனை தியானியுங்கள். அதுவே பழக்கமாக மாறும். பின்னர் கவலைகளுக்கு குட் பை சொல்லி விடலாம். அரிதிலும் அரிது மானிடப் பிறவி, அதனிலும் அரிது அவன் தன் எண்ணத்தை ஒருமுகப்படுத்துவது என்று கூறுவார்கள்.

theertha kinnam

இறைவன் நீரில் எழுந்தருளுவான். எனவே தான் புண்ணிய நதிகளின் தீர்த்தம் வைக்கப்படுகிறது. அதுவும் இல்லையா? பரவாயில்லை. நிறை குடத்திலிருந்து சிறிய தீர்த்த கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொள்ளவும். எடுக்கும் போது பக்தியுடன் நதி நீராகவே பாவித்து மனதில் இறைவனை நிலை நிறுத்தி கொள்ளுங்கள் போதும். தண்ணீரே தீர்த்தம் தான். துளசி இருந்தால் போட்டு வைக்கவும். புனித தீர்த்தம் தயார். வேறென்ன வேண்டும்? இந்த நீரில் இறைவா எழுந்தருள்வாயாக.. என்று கூப்பிட்டாலே போதும் ஓடோடி வந்து விடுவான். அது போல பிரசாதம் ஏன் வைக்க வேண்டும்? ‘ப்ர’ என்றால் கடவுள். சாதம் என்றால் வெறும் சாதம். சாதத்தை கடவுளுக்கு படைக்கும் போது அது பிரசாதமாக உரு பெறுகிறது. எனவே உங்களால் முடிந்தது கற்கண்டோ, உடைத்த கடலையோ, பேரீச்சம் பழமோ, பாலோ, பழமோ வைத்து வழிபாட்டால் நீங்கள் செய்யும் பூஜை முழுமை பெறும். வெற்றிலை, பாக்கு வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

poojai arai

முழுமையாக பூஜையை செய்வதால் மனதிலும் திருப்தி ஏற்படுவதை உணர முடியும். மனோபலம் அதிகரிக்கும். செய்யும் காரியங்கள் குழப்பம் இல்லாமல் செய்வீர்கள். காரிய தடை அகலும். மனதில் உற்சாகம் குடி கொள்ளும். இல்லத்தில் நல்ல சக்திகள் ஊடுருவி குடும்பத்தில் அமைதியை உண்டாக்கும். மனம் ஒருநிலைபடும். ஆரோக்கியம் சீராக இருக்க உதவி செய்யும். இவ்வளவு நன்மைகளும் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Poojai arai ragasiyam. Poojai nanmaigal. Poojai valipadu Tamil. Pooja seivathu eppadi in Tamil.