இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.

hanuman

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு வரை கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த தொழிலும் லாபம் காண்பது அரிதாகி போனது. தொழிற்த்துறை போட்டிகள் வழு பெற்று கொண்டிருக்கும் நேரம் இது. ஆனால் எந்த தொழில் செய்தாலும் முதலுக்கே மோசம் என்ற நிலை தான் உள்ளது. மத்திய அரசால் கொண்டு வரபட்ட ஜி‌எஸ்‌டி வரி விகிதத்தில் அதிகளவு பாதிக்கபட்டவர்கள் வியாபாரிகள் மற்றும் தொழில் புரிபவர்களே. அன்றாட கூலிக்கே திண்டாட்டம் என்ற புலம்பல் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் இருக்கிறது. மனிதர்களுக்கு பிரச்சனை என்றால் தான் இறைவனின் திசை கண்களுக்கு புலப்படும். சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம். அதீத சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேய பரிகாரம் இது. வாருங்கள் எப்படி இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று இப்பதிவில் விரிவாக காணலாம்.

hanuman

மேலும் உங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க இந்த எளிய வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். அனுமார் நம் அனைவருக்கும் விருப்பமான கடவுள். வேண்டிய வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தரும் அற்புத கடவுள் அனுமார். அவரை பிரதி வாரம் செவ்வாய் அன்று அதிகாலை நீராடி தூய ஆடை தரித்து 6 மணிக்கு அனுமார் படம் வைத்து அவருக்கு விருப்பமான சுந்தர காண்டம் புத்தகத்தை சந்தன, குங்குமம் இட்டு மலர் சாற்றி படத்திற்கு முன்பாக வைத்து தீபமேற்றி தூபம் காண்பித்து கீழே இருக்கும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.

காலையில் கூற வேண்டிய மந்திரம்:
ஓம் ஹம் அனுமதயே நமஹ!!

hanuman

அன்றைய தினம் முழுவதும் பால் மற்றும் பழம் தவிர ஆகாரம் எதுவும் எடுத்து கொள்ளக் கூடாது. பின்னர் அனுமாருக்கு விருப்பமான பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு எப்போதும் போல் வழக்கமான பணிகளை தொடங்கலாம். மீண்டும் மாலை 6 மணிக்கு செம்பு கலசம் ஒன்றை எடுத்து கொள்ளவும். சிவப்பு துணியினால் கலசத்தை சுற்றி கொள்ளவும். நல்ல தண்ணீரை நிரப்பி சிறிது பச்சை கற்பூரம், 4 ஏலக்காய், ஒரு ரூபாய் நாணயம் ஒன்று போட்டு கொள்ளவும். கலசத்தின் மேல் தேங்காய் வைத்து மலர் கொண்டு அலங்காரம் செய்யவும். பின்னர் இந்த மந்திரத்தை 1008 முறை கூறி பூஜையை நிறைவு செய்யவும்.

- Advertisement -

மாலையில் கூற வேண்டிய மந்திரம்:
ஓம் நமோ! பகவதே! ஆஞ்சனேயாயை மஹாபலாயை சுவாஹா.

Anjaneya mantra in Tamil

இந்த எளிய பரிகாரம் செய்வதனால் உங்களின் தொழிலில் ஏற்பட்டிருக்கும் சரிவு நீங்கி வளர்ச்சி பாதையில் செல்லும். லாபம் அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருப்பவர்களும் இந்த வழிபாட்டை செய்வதால் வாழ்கையில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வளமுடன் வாழலாம். அதிக சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை மிகுந்த பக்தி சிரத்தையுடன், முழு நம்பிக்கையுடனும் செய்து வாருங்கள். இந்த பரிகாரத்தை இவ்வளவு வாரம் என்று இல்லை எவ்வளவு வாரம் செய்கிறீர்களோ அவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே
உங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Hanuman pariharam tamil. Hanuman manthiram tamil. Hanuman vazhipadu secrets. Hanuman valipadu Tamil.