100 நாட்களில் நினைத்தது நிறைவேற என்ன செய்ய வேண்டும் ?

ammanl-1

நாம் நினைத்தது எதுவும் நடப்பதே இல்லையே.. இறைவன் ஏன் இப்படி நம்மை சோதிக்கிறார் என்று நினைப்பவர்கள் பல பேர். கவலையை விடுங்கள், உங்கள் கோரிக்கைக்கு இறைவன் 100 நாட்களில் செவி சாய்க்க ஒரு அற்புத வழி உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

pradhakshanam

நீங்கள் விரும்பிய கோயிலிற்கு சென்று இறைவனை மனதார வணங்கிவிட்டு பின் அந்த கோவிலை 1000 முறை பிரதட்சிணம் செய்யுங்கள். தினமும் 1000 முறை என்றால் 100 நாட்களில் 1 லட்சம் முறை பிரதட்சிணம் செய்திருப்பீர்கள். இது தவிர தினமும் காலையில் பசு, அரச மரம், துளசி மாடம் ஆகியவற்றை சுற்றுவது மேலும் பயன் அளிக்கும். 100 நாட்களில் 1 லட்சம் என்பது குறைந்தபட்ச எண்ணிக்கையே. உடலில் தெம்பும் பலமும் உள்ளவர்கள் இதற்கு மேலும் சுற்றலாம்.

கோவிலை சுற்றும்போது நிதானம் தேவை. அவரசப்படாமல் அடி மேல் அடி எடுத்துவைத்து சுற்ற வேண்டும். மேலும் கோவிலை சுற்றும்போது இறைவனை தவிர வேறு எதையும் நினைக்க கூடாது. இதை ஒரு கடமையாக செய்யாமல் ஆத்மாத்மமாக செய்ய வேண்டும். இதை மீறி இரண்டு மூன்று பேர் கூடிக்கொண்டு குடும்ப கதை பேசிக்கொண்டு கோவிலை எத்தனை லட்சம் முறை சுற்றினாலும் பெரிதாக பயன் இருக்காது.

gopuram

சிவன் கோவிலை சுற்றும்போது ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே சுற்றலாம். அம்மன் கோவிலை சுற்றும்போது “ஓம் பராசக்திநம” என்றும், பெருமாள் கோவிலை சுற்றும்போது “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தையும் ஜபிக்கலாம்.

- Advertisement -

Manthra

பசுவை சுற்றும்போது இந்த மந்திரத்தை கூறலாம்:

ஓம் பசுபதயேச வித்மஹே மகா
தேவாய தீ மஹி தந்தோ
பசுதேவி: ப்ரசோதயாத்

துளசி மாடத்தை சுற்றும்போது இந்த மந்திரத்தை கூறலாம்:

ஓம் துளசீயாய வித்மஹே
திருபுராரியாய தீமஹி
தன்னோ துளசி ப்ரசோதயாத்