கடவுளுக்கு உங்களை பிடிக்கும் என்பதை உங்களால் எப்படி உணர முடியும்

shiva

எல்லோருக்கும் ஆன்மீகத்தில் எப்பொழுதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஈடுபாடும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. கடவுளுக்கு இவர்களைப் பிடிக்கும் இவர்களை பிடிக்காது என்று பாகுபாடு பார்ப்பதில்லை. அவருக்கு இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவன்களும் அவர்களின் குழந்தைகளாக எண்ணுகிறார். நீங்கள் கடவுள் இருக்கு என்று சொன்னாலும் சரி இல்லை என்று சொன்னாலும் சரி உங்களை அவர் தண்டிப்பதில்லை. கடவுளை பற்றி இன்னும் சுவாரசியமான விஷயங்களைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

 

தன்னை தேடி உதவி என்று உண்மையாக பிராத்தனை செய்பவருக்கு அவர் கண்டிப்பாக உதவி செய்வார். கடவுள் உண்மையாகவே இருக்கிறாரா என்பதற்கு சில காரணங்கள் மூலம் நாம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். நாம் ஏதாவது ஒரு முக்கிய தளத்திற்கு செல்லும் பொழுது அங்கு நம்மை அறியாமல் உடல் சிலிர்த்து காணப்படும். அப்பொழுது, அங்கு இறைவன் இருக்கிறான் என்பதை நம்மால் உணர முடியும். அப்படி ஏதோ ஒரு இடத்தில் கடவுளாகபட்டவர் அந்த நேர்மறையான விளைவை உங்களது மீது பாய்ச்சுவது மூலமாக தன்னை உணர வைப்பார். கோவிலின் உள்ளே நுழைந்தால் நேரத்திலிருந்து வெளியே செல்லும் வரை அவர்கள் கவனம் மற்றவர்கள் யார்மீதும் இல்லாமல் முழு கவனமும் கடவுளிடத்தில் இருந்தால் அவர்கள் இடத்தில் கடவுள் இருக்கிறார்.

 

ஒரு கோவிலிலோ அல்லது வீட்டை பூஜை பூஜை அறையில் இனம்புரியாத வாசம் வருவதை நம்மால் உணர முடிந்தால் கண்டிப்பாக நாம் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறோம். என்று ஆன்மீக ரீதியான உண்மை கோவிலுக்குச் சென்று சுவாமியை வழிபட அமல் சிறிது நேரம் அமைதியாக நின்று சுவாமி அலங்கார பார்த்துக்கொண்டு இருப்பார்கள். திடீரென்று சத்தமாக அந்த சுவாமியின் நாமத்தை கூச்சலிட்டு சொல்வார்கள் மனதில் எந்த வஞ்சகமும் இல்லாதவருக்கு இதுபோன்று நடக்கும்.

- Advertisement -

Perumal

 

அதேபோல கோவிலிலோ அல்லது மற்ற இடங்களில் நம்மை அறியாமலே நமது கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிக்கும் அப்போது நமது மனநிலை சோகம் அல்லது மகிழ்ச்சியாகவும் எந்தவித எண்ணங்களும் இல்லாமல் ஒரே மனநிலையில் தான் இருப்போம். இருந்தபோதிலும் நம்மையறியாமலே கண்களிலிருந்து கண்ணீர் வரும் இதன் அறிகுறியாக கடவுள் நம் பக்கத்தில் இருப்பதை நாம் உணரலாம். ஒருசில தியானம் செய்யும் பழக்கம் உடையவர்கள் இருந்தபோதிலும் அவர்களால் சில நிமிடங்கள் தியானம் செய்ய இயலும் ஆனால் இறைபக்தி உடையவர்கள் மிகுந்த நேரம் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் கடவுளிடத்தில் இரண்டர கலந்து தனது ஆத்மாவை சுத்தம் செய்து கொள்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே:
இரவில் தூங்குவதால் உண்டாகும் ஆச்சரியமான விஷயங்கள்! சித்தர் கூறிய ரகசிய உண்மைகள்

English overview:
Here we have how to closer to God realise God in tamil. We have details of realise God too.