இரவில் தூங்குவதால் உண்டாகும் ஆச்சரியமான விஷயங்கள்! சித்தர் கூறிய ரகசிய உண்மைகள்

sleepinp-direction
- Advertisement -

நம் அன்றாட வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு தூங்குவதற்காக நாம் செலவிடுகிறோம். இதனால், நமக்கு உண்டாகும் நன்மைகளைப் பற்றி சித்தர் அருளிய குறிப்புகளை இப்பதிவில் காணவிருக்கிறோம்.

Sleeping Position

 

- Advertisement -

அறிவியல் ரீதியாக தூங்குவதற்கு ஏற்ற காலமாக இரவு நேரம் அமைகிறது. இயற்கை நியதியாக நாம் பகலில் விழித்து இருப்போம். ஆனால், இரவில் தூங்கி விடுவோம். இரவில் பூமியின் வெப்பநிலை மாறி குளிர்ச்சியாக காணப்படும். இதனால், தூங்குவதற்கு சரியான நேரம் இரவு நேரம் ஆகும். இரவு நேரங்களில் நாம் விழித்திருந்தால் தீமைகள் உண்டாகும். ஆழ்ந்து உறங்கினால் நமது உடல் புத்துணர்வு பெற்று உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வித தீங்கும் வராமல் பாதுகாக்கிறது.

 

- Advertisement -

உடம்பில் காணப்படும் செல்கள் புத்துணர்வு பெற நாம் இரவில் நன்றாக தூங்க வேண்டும். இரவில் நம் உடல் வளர்ச்சி அடைகிறது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் நாம் இரவில்தான் தொலைபேசி மற்றும் காணொளிகளை பார்ப்பதற்காக விழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால், உடல் நலம் பாதிப்படைகிறது. இரவில் உறங்குவதால் நமது ஐம்புலன்களும் ஓய்வெடுத்து காலையில் புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் செய்யும் வேலைகளில் எந்தவித தடைகளும் இல்லாமல் சரியாக செய்து முடிக்கலாம்.

sleeping positions

 

- Advertisement -

சித்தர்கள் கூறிய படி இடது கை தரையில் இருக்கும்படி, கால்களை நன்றாக நீட்டிக் கொண்டும், ஒரு பக்கமாக நாம் உறங்குவதால் நமது மூச்சில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி நாம் நிம்மதியான உறக்கத்தைப் பெறுவோம். இப்படி நாம் உறங்குவதால் நாம் நீண்ட ஆயுள் பெறுவோம் என சித்தர் கூறியுள்ளார். இதனால், உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து உணவை நன்றாக செரிமானம் செய்து உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காமல் பாதுகாக்கிறது.

இதையும் படிக்கலாமே:
கனவு காண்பதால் ஏற்படும் அற்புத பலன்கள்

English Overview:
Here we have sidhar talks about benefits of night sleep in tamil. We have details of how to sleep too.

- Advertisement -