- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநன்மைகளைத் தரும் மகாலட்சுமி தீபம்

நன்மைகளைத் தரும் மகாலட்சுமி தீபம்

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்பதற்காக பலரும் பல விதங்களில் வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்தது. அதோடு மட்டுமல்லாமல் வரலட்சுமி விரதம் வரக்கூடிய ஒரு அற்புதமான மாதமாகவும் இந்த ஆடி மாதம் திகழ்வதால் இந்த மாதத்தில் மகாலட்சுமி தாயாரை நாம் கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் மிகவும் எளிமையான இந்த ஒரு தீப வழிபாட்டு முறையை நாம் செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அந்த தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தீபமேற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட தீப வழிபாடு என்பது நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய வழிபாடு எனினும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது அதற்குரிய பலன்கள் என்பது மாறுபடும். அந்த வகையில் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆடி மாதம் நிறைவடைவதற்குள் ஒரு நாள் மட்டுமாவது இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது மாலை 6:00 மணிக்கு மேல் செய்யலாம். ஆடி மாதத்தில் தான் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அதீத சக்திகள் உண்டாகி நம் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றும் என்றே கூறலாம். இருப்பிடம் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாக இந்த ஆடி மாதம் திகழ்வதால் இந்த மாதத்திலேயே நாம் இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிப்பது மிகுந்த பலனை தரும். ஒரு நாள் மட்டுமாவது இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலேயே நல்ல பலன்கள் உண்டாகும்.

இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கிழியாத நல்ல வெற்றிலையாக 5 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் காம்பு பகுதி உள்புறமாகவும் நுனிப்பகுதி வெளிப்புறமாகவும் இருப்பது போல் வட்ட வடிவத்தில் 5 வெற்றிலைகளையும் தாம்பாளத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நடு பக்கத்தில் சிறிய இடம் காலியாக இருக்கும். அந்த இடத்தில் சுத்தமான கஸ்தூரி மஞ்சள் அல்லது நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மஞ்சளையும் வைக்க வேண்டும். அப்படி மஞ்சள் வைக்கும் பொழுது அந்த மஞ்சளுடன் ஜவ்வாது, பச்சை கற்பூரம் போன்றவற்றை கலந்து சற்று கெட்டியாக பிள்ளையார் பிடிப்பது போல் உருண்டையாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்த மஞ்சள் உருண்டைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைக்க வேண்டும். அடுத்ததாக ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து அதை பன்னீரில் சுத்தம் செய்து ஒவ்வொரு வெற்றிலையின் மீதும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அந்த நாணயத்திற்கு மேல் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையின் நுனி பகுதியிலும் சந்தனம் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையின் நுனிப்பகுதிக்கும் ஒரு ரூபாய் நாணயத்திற்கும் நடுவில் இருக்கக்கூடிய இடத்தில் வாசனை மிகுந்த மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது மகாலட்சுமி தாயாரை நினைத்து தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றி முடித்த பிறகு மகாலட்சுமி தாயாரின் அஷ்டகத்தை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்கலாம் இயலாதவர்கள் டைமண்ட் கற்கண்டையாவது வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை விலகும். தன தானியம் அதிகரிக்கும். சர்வ காரிய சித்தி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: ஷோடசக் கலை நேர வழிபாடு

சக்தி வாய்ந்த இந்த மகாலட்சுமி தீபத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து யார் ஒருவர் வீட்டில் ஏற்றுகிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமியின் பரிபூரண அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்