எந்த ஒரு காஸ்லியான கண்டிஷனரும் போடாமல் உங்கள் முடியை சில்கியாக ஷைனிங்காக மாற்ற செலவே இல்லாத சிம்பிள் ஐடியா இது.

hair5
- Advertisement -

இன்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகின்றோம். முடியை ஷைனிங்காகவும், சில்க்கியாகவும் மாற்றுவதற்கு இந்த ஹேர் பேக் பயன்படும். முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் இந்த ஹேர் பேக் பயன்படும். அதேபோல உங்கள் தலையில் பொடுகு தொல்லை இருந்தால் அதை சரி செய்யவும் இந்த ஹேர் பேக் பயன்படும். அப்படியென்றால் ஒரே கல்லில் மூன்று மாங்காயோ. சரி, நேரத்தை கலக்காமல் இந்த அழகு குறிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இந்த அழகு குறிப்பை தெரிந்து கொண்டால் தலைக்கு காஸ்லியான கண்டிஷனர் வாங்க கூடிய செலவு கொஞ்சம் மிச்சம்.

ஷைனிங் ஆன கூந்தலைப் பெற ஹேர்பேக்:
இந்த குறிப்புக்கு நமக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். முட்டை 2, தயிர் 2 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொருட்கள் கட்டாயம் தேவைப்படும். முட்டையை வெள்ளை கருவை மட்டும் சேர்த்துக் கொண்டாலும் சரி, அல்லது மஞ்சள் கருவோடு போட்டாலும் சரிதான். சில பேருக்கு மஞ்சள் கருவின் வாடை பிடிக்காது என்பதால் அதை தவிர்த்து விடுவார்கள்.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் முட்டை, தயிர், ஆலிவ் ஆயில், இந்த 3 பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு ஹேர்பேக் அப்ளை செய்து விடுங்கள். இந்த ஹேர் பேக்கை நுனி முடி வரை போட்டால் முடியில் இருக்கும் வெடிப்புகள் கூட சரியாகிவிடும். பிறகு 1/2 மணி நேரம் பேக் நன்றாக ஊறியதும் மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட்டால் உங்களுடைய தலைமுடி அவ்வளவு ஷைனிங்காக பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே தலைக்கு ஹேர் பேக் வைப்பதற்கு முன்பாக தலையை நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்து சிக்கு எடுத்து பின்பு தலை முடியை இரண்டு பாகங்களாக பிரித்து சிக்கு ஆகாமல் ஹேர் பேக்கை அப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் தலைக்கு குளிக்கும்போது முடி உதிர்வு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சரிங்க, சில பேர் முட்டை யூஸ் பண்ண மாட்டாங்க. அவங்க என்ன செய்வது. சில பேருக்கு தயிரும் தலைமுடிக்கு செட் ஆகாது. அப்படிப்பட்டவர்கள் ஒரு சின்ன பவுலின் திக்கான தேங்காய் பால் 5 டேபிள் ஸ்பூன், ஆலிவேரா ஜெல் 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக அடித்து கலந்தால் வெள்ளை நிறத்தில் ஒரு கிரீம் போல கிடைக்கும். அதை உங்களுடைய தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும்.

தலைக்கு மேல் பக்கத்திலிருந்து முடியின் கீழ் பக்கம் வரை இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்து விட்டு 1/2 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து பாருங்கள். டிரை ஆக இருந்த உங்களுடைய முடி சில்கி ஷைனிங்காக மாறி இருக்கும். தொடர்ந்து இந்த குறிப்புகளை பின்பற்றி வர வறட்சியடைந்த உங்கள் முடி சாப்டாக மாறுவதை உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: கட்டுக்கடங்காத கருகருவென்ற அடர்ந்த நீளமான கருங்கூந்தலை பெற ஆளி விதையை இப்படி பயன்படுத்தினாலே போதும். இந்த எளிமையான குறிப்பு மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

ஃபிரஷ் ஆக கிடைக்கும் அலோவேரா ஜெல் கிடைத்தால் இதற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இல்லை என்றால் கலர் சேர்க்காத எந்த ஒரு வாசனை திரவியமும் சேர்க்காத வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆலோவேரா ஜெல்லை கடையிலிருந்து வாங்கி பயன்படுத்தவும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -