ஒரே வாரத்தில் குதிகால் பிரச்சனை சரியாக

foot tips
- Advertisement -

குதிகால் பிரச்சனை என்பது இப்போதெல்லாம் அனைவரும் எதிர் கொள்ளும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. இந்த வெடிப்பானது பல்வேறு காரணங்களால் வரும். குறிப்பாக இது குளிர் காலத்தில் அதிகமாக ஏற்படும். முதலில் குதி கால்களில் லேசாக செதில்கள் உருவாகி பின் அது வலியை ஏற்படுத்த கூடிய அளவுக்கு மாறி விடும்.

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு பருவநிலை மாற்றம், உடல் பருமன், கிருமி தொற்று ,என காரங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் குதிகால் வெடிப்பு வந்து விட்டால் பாதத்தின் அழகு குறைவதோடு அது ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல என்பது மட்டும் உண்மை. உடலையும் தாங்கும் குதிகாலை நல்ல முறையில் பராமரிக்க அருமையான குறிப்புகளை அழகுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குதிகால் வெடிப்பு குணமாக

இரண்டு வாழைப்பழங்களை எடுத்து நன்றாக வசித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் பாதங்களை அழுக்குகள் இல்லாமல் சுத்தம் செய்த பின்பு இந்த வாழைப்பழத்தை கால் முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து பாதங்களை சுத்தம் செய்து விடுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யும் போது வெடிப்பு குணமாகும்.

அதே போல் பாதங்கள் மூழ்கும் வரை ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டுடன் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தேன் கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் பாதங்களை அதில் 20 நிமிடம் வரை வைத்து அதன் பிறகு லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். இந்த முறையை தூங்குவதற்கு முன்பு தொடர்ந்து செய்யும் போது குதிகால் வெடிப்பு சரியாகும்.

- Advertisement -

அடுத்து மரக்கறி எண்ணெய் இந்த எண்ணையை கால்களை நன்றாக சுத்தம் செய்த பிறகு கால் முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காலுறை அணிந்து தூங்கி விடுங்கள். இரவு முழுவதும் இது அப்படியே இருக்க வேண்டும் இது மற்ற அனைத்திலும் விட சிக்கீரமாகவே நல்ல பலனை தரும்.

வேசலின் மற்றும் எலுமிச்சை கொண்டும் குதிகால் வெடிப்பை சரியாகலாம். இதற்கு சூடான தண்ணீரில் கால்களை 15 நிமிடங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பாதங்களை சுத்தமாக துடைத்து விட்டு வேசலின், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக குழைத்து பாதங்களில் தேய்க்கவும், இதை இரவு தூங்குவதற்கு முன்பு தொடர்ந்து செய்யதால் நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -

இதை முறை செய்வதற்கு முன்பாக கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் வரை வைத்து எடுத்து விட்டு பாதங்களை சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் பச்சரிசி மாவு, தேன், வினிகர் மூன்றையும் நன்றாக குழைத்து அதை பாதங்களில் பூசுங்கள். இது இரவு முழுவதும் உங்கள் பாதங்களில் இருக்க வேண்டும். இது ஒரே வாரத்தில் உங்கள் பாதத்தில் உள்ள வெடிப்புகளை மறைய செய்து விடும்.

இதையும் படிக்கலாமே: சருமத்தை அழகாக்கும் வேப்பிலை ஃபேஸ் பேக்

இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதும். உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து பாதங்கள் மென்மையாக மாறும். உடலையும் முகத்தை காக்க எந்த அளவுக்கு நாம் மெனக்கிடுகிறோமோ, அதே அளவு பாதத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்க வேண்டும். இந்தப் பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு பயன்படுமாயின் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -