சருமத்தை அழகாக்கும் வேப்பிலை ஃபேஸ் பேக்

neem face pack
- Advertisement -

அழகை விரும்பாத நபர்கள் இன்று யாராவது இருக்க முடியுமா? நாம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட நாலு பேர் பார்த்து நம்மை அழகாக இருக்கிறார் என்று கூறவேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதனால் தான் தங்களால் இயன்ற அளவு தங்களுடைய அழகை மேலும் வெளிப்படுத்தி அழகாக இருப்பது போல் தோற்றத்தை அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பொருட்களில் பல நன்மைகள் இருந்தாலும் அதில் உடனடி பலன் கிடைக்காது என்ற ஒரே காரணத்தினால் செயற்கையாக கிடைக்கக்கூடிய கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்தி தங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள். அதை தவிர்த்து விட்டு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய மிகவும் எளிமையான மருத்துவ குணம் மிகுந்த வேப்பிலையை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்தால் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக வேப்பிலை என்பது கசப்பு சுவை மிக்கதாக திகழ்கிறது. அன்றைய காலத்தில் முகத்தில் பருக்கள் அதிகமாக ஏற்பட்டாலும், சருமத்தில் தொற்று நோய்கள் ஏதாவது ஏற்பட்டாலும் நம்முடைய முன்னோர்கள் வேப்பிலையை அரைத்து தேய்த்து ஊற வைத்து குளிக்க வைக்க சொல்வார்கள். இன்றைய காலத்தில் அவை அனைத்தும் மறந்து போய்விட்டது. கடைகளில் வேப்பிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏதாவது கிடைத்தால் அதை வாங்கி உபயோகப்படுத்துகிறோம். அதற்கு மாற்றாக நம்முடைய சாலை ஓரங்களில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய வேப்பிலைகளை பறித்து வந்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் பயன்படுத்தினாலே பல அற்புதமான பலன்களை நம்மால் பெற முடியும்.

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக டேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றாமல் அம்மி கல்லில் போட்டு அரைத்துக் கொள்வது நல்லது. இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கட்டித் தயிரை சேர்க்க வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கொள்ளலாம். ஆண்கள் மஞ்சளை சேர்க்க வேண்டாம்.

- Advertisement -

இதை நன்றாக கலந்து முகத்தில் அப்படியே தடவி ஃபேஸ் பேக் போட வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை கொஞ்சம் கனமாக போட வேண்டும். மெல்லியதாக போடக்கூடாது. இது நன்றாக முகத்தில் கால் மணி நேரத்தில் இருந்து அரை மணி நேரம் வரை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இருக்கட்டும். இதனால் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்கள் அனைத்தும் நீங்கும். மேலும் இதில் பல உயிர் சத்துக்களும் நிறைந்து இருக்கிறது என்பதால் முகத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது.

இதை நாம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் உபயோகப்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் சூரிய கதிர்களால் ஏற்பட்ட கருமையை நீக்க உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இது கரும்புள்ளிகளை நீக்கும் ஆற்றலையும் பெற்றதாக திகழ்கிறது. முகத்தில் காயங்களாலும் பருக்களாலும் ஏற்பட்ட தழும்புகள் மறையவும் இந்த வேப்பிலை ஃபேஸ் பேக் உதவுகிறது. வறண்ட சருமம் இருப்பவர்கள் இந்த வேப்பிலை ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்துவதன் மூலம் இயற்கையிலேயே ஈரத்தன்மை மிகுந்த பொலிவான சருமத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: முடியை வேகமாக வளரச் செய்ய உதவும் சீரம்

இவ்வளவு அற்புதமான பண்புகளைக் கொண்ட இந்த வேப்பிலை ஃபேஸ் பேக்கை நாமும் உபயோகப்படுத்தி நம்முடைய முகத்தை மேலும் அழகாகலாம்.

- Advertisement -