எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பழகுவது சிறந்தது தெரியுமா ?

astrology

பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒரு குணம் உண்டு அந்த குணத்தை அறிந்து அவர்களோடு பழகுவதன் மூலம் எப்போதும் பிரச்சனைகள் இல்லாமல் நீண்ட காலம் அவர்களோடு பழக முடியும்.

மேஷம்:
meshamமேஷ ராசிக்காரர்கள் புகழ்ச்சியை விரும்புவார்கள். ஆகையால் இவர்களை யாரவது விளையாட்டிற்கு கூட இகழ்ந்து பேசினால் கோபித்துக்கொள்ளுவார்கள். இவர்களுக்கு நகைச்சுவை பிடிக்கும். இவர்களும் அவ்வப்போது நகைச்சுவையோடு பேசுவார்கள். அந்த சமயத்தில் இவர்களின் ஜோக்கிற்கு நாம் சிரிக்கவில்லை என்றால் இவர்கள் முகம் வாடுவார்கள். ஆகையால் இவர்களின் நகைச்சுவை பேச்சிற்கு சிரிப்பே வரவில்லை என்றாலும் கூட கொஞ்சம் சிரிப்பது நல்லது.

ரிஷபம்:
rishabamரிஷப ராசிக்காரர்களுக்கு கனிவோடும் பாசத்தோடும் பேசுபவர்களை பிடிக்கும். அதோடு இவர்கள் அன்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவுகளுக்குள் ஏற்படும் சிறு சிறு உரையாடல்களை கூட உன்னிப்பாக கவனிப்பார்கள். உறவுகள் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் இவர்களை யாரேனும் மனதளவில் கஷ்டப்படுத்தினால் அதற்காக இவர்கள் அதிக அளவில் வருத்தப்படுவார்கள். ஆகையால் மென்மையாகவும் போலித்தனம் இல்லாமலும் இவர்களிடம் பழகினால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

மிதுனம்:
midhunamமிதுன ராசிக்காரர்கள் மற்றவர்கள் பேசுவதை அதிக உன்னிப்போடு கவனிப்பவர்கள். ஆகையால் இவர்களிடம் மாற்றி மாற்றி பேசினால் இவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். சமூகத்தில் தான் ஒரு பெரிய மனிதனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். அந்த எண்ணமானது இவர்களின் வீட்டிற்குள்ளும் நண்பர்கள் வட்டத்திலும் கூட இருக்கும். ஆகையால் இவர்களை விட பெரிய பதவியில் இவர்களின் உறவினரோ நண்பரோ இருந்தாலும் கூட இவர்களை நன்கு உபசரித்து நடந்தால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

கடகம்:
kadagamகடக ராசிக்காரர்கள் தன் மேல் அன்பு செலுத்துபவர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்கள் யார் மேல் அன்பாக இருக்கிறார்களோ அவர்களிடம் இவர்களுக்கு எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும். எதிர்பார்பு நிறைவேறாத சமயங்களில் இவர்கள் வருத்தப்படுவார்கள். ஆகையால் இவர்களிடம் அன்பாகவும் எதிர்பார்ப்புகளை முடிந்தவரை நிறைவேற்றுபவர்களாகவும் இருந்தால் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும்.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களை பிடிக்கும். அதே போல இவர்கள் மேல் யாரேனும் ஆதிக்கம் செலுத்தினால் அது இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. ஆகையால் இவர்களிடம் நேர்மையாகவும் மரியாதையாகவும் இருந்தால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

- Advertisement -

கன்னி:
kanniகன்னி ராசிக்காரர்களிடம் நட்பாக இருப்பது நல்லது. இவர்களை யாரேனும் காக்க வைத்தால் இது இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. குறிப்பாக இவர்களுக்கு பிடித்தவர்கள் இவர்களை காக்கவைத்தால் அதற்காக கோவம் கொள்வார்கள். ஆகையால் இவர்களிடம் நட்போடும் நேரம் தவறாமலும் இருந்தால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

துலாம்:
thulamதுலாம் ராசிக்காரர்கள் மனிதர்களை எடைபோடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆகையால் இவர்களிடம் எப்போதும் உண்மையாக இருப்பதே நல்லது. இவர்கள் பார்க்க சாதுவாக இருந்தாலும் உள்ளே அதிக கோவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆகையால் இவர்களை மரியாதையோடு நடத்துவது நல்லது.

விருச்சிகம்:
virichigamவிருச்சிக ராசிக்காரர்களிடம் கோவமும் அன்பும் சமமாக இருக்கும். இவர்களை தட்டி கொடுத்து பேசினால் இவர்கள் அன்போடு பழகுவார்கள். இவர்கள் மிகுந்த பொறுமை சாலிகளாக இருப்பார்கள். சில நேரங்களில் அவசரமாக செய்யக்கூடிய செயலை கூட இவர்கள் பொறுமையாகவே கையாளுவார்கள். ஆகையால் இவர்களிடம் அன்பாகவும் இவர்களின் பொறுமையை அனுசரிப்பவராகவும் இருந்தால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

தனுசு:
dhanusuதனுசு ராசிக்காரர்கள் அன்பிற்கு அடிமையானவர்கள். அதேபோல தன் மனதிற்கு பிடித்தவர்களிடம் இவர்களுக்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாத சமயங்களில் இவர்கள் கோவம் கொள்வார்கள். ஆகையால் அன்போடும், எதிர்பார்ப்பை முடிந்தவரை நிறைவேற்றுபவர்களாகவும் இருந்தால் இவர்களோடு நீண்ட நாள் உறவு நீடிக்கும்.

மகரம்:
magaramமகர ராசிக்காரர்கள் தங்கள் மனதில் உள்ள வருத்தங்களை வெளிப்படுத்தும் இயல்புடையவர்கள். இவர்களின் மனதை புரிந்துகொண்டு இவர்களின் மனதில் உள்ள பாரத்தை யார் பொறுமையாக கேட்கிறார்களோ அவர்கள் மேல் இவர்கள் பாசமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்பாக பழகும் குணம் கொண்டவர்கள். அதேபோல ஒருவர் மீது இவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் மீண்டும் அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது கடினம்.

கும்பம்:
kumbamகும்ப ராசிக்காரர்கள் மிகுந்த ஆற்றல் உடையவர்கள். அவர்களின் ஆற்றலிற்கு தூண்டுகோலாக இருபவர்க மீது அவர்களுக்கு இயல்பாகவே அன்பு அதிகமாக இருக்கும். இவர்களிடம் வேகத்தை காட்டிலும் விவேகமாக செயல்படுவது நல்லது.

மீனம்:
meenamமீன ராசிக்காரர்கள் மரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டார்கள். அதே போல இவர்கள் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். ஆகையால் இவர்களிடம் மரியாதையோடும் நேர்மையோடும் பழகினால் அந்த உறவு நீண்டகாலம் நீடிக்கும்.

இதில் உள்ள ராசி பலன் அனைத்தும் பொதுவான பலன்களே. அவரவர் நட்சத்திரம்,லக்கினம் மற்றும் ஜாதகத்தை பொறுத்து இதில் சில மாறுதல்கள் இருக்கலாம்.