வீடு கூட்ட பயன்படுத்தும் துடைப்பம் அடிக்கடி வாங்க வேண்டி இருக்கா? எவ்வளவு மாதம் ஆனாலும் ஒரு குச்சி கூட உதிராமல் இருக்க இப்படி செய்யலாமே!

thudaippam-broom
- Advertisement -

நாம் தினந்தோறும் வீடு கூட்ட பயன்படுத்தும் துடைப்பம் வாங்கிய புதிதில் என்னவோ நீளமாக, அடர்த்தியாக இருக்கும். ஆனால் பயன்படுத்த பயன்படுத்த அதன் நீளமும், அடர்த்தியும் குறைந்து குச்சிகள் மட்டுமே அதிகமாக இருக்கும் படியாக இருக்கும். நாம் வீடு கூட்டும் பொழுது அதிலிருக்கும் குச்சிகளும் சேர்த்து தரையை கிழிக்கும். எவ்வளவு மாதங்கள் வேண்டுமானாலும் வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ அதே போல துடைப்பத்தை வைத்து கொள்வதற்கு என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

broom-thudaippam1

துடைப்பம் வாங்கும் பொழுது அதன் பிடி எடை குறைவாகவும், கீழிருக்கும் துடைப்பம் எடை அதிகமாகவும் இருக்கும் படியாக பார்த்து வாங்க வேண்டும். பின்னர் புதிதாக இருக்கும் துடைப்பத்தில் நுண் துகள்கள் கொட்டிக் கொண்டே இருக்கும். இதனை சரி செய்ய துணி துவைக்கும் பிரஸ் அல்லது தலைவார பயன்படுத்தும் சீப்பு கொண்டு நன்கு வாரி விட்டால் முக்கால்வாசி இருக்கும் அத்தனை துகள்களும் விழுந்துவிடும். அதன் பிறகு சொரசொரவென்று இருக்கும் தரைப்பகுதியை பெருக்கினால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும். ஒருமுறை தண்ணீரில் முக்கி எடுத்து வெயிலில் நன்கு காய வைத்தால் இன்னும் சிறப்பாக மொத்த துகள்களும் உதிர்ந்து நல்ல துடைப்பம் கிடைக்கும்.

- Advertisement -

துடைப்பத்தின் குச்சிகள் நாம் பயன்படுத்தும் பொழுது சில சமயங்களில் அடிக்கடி உருவி வந்து விடுவது உண்டு. இப்படி உருவி வராமல் இருக்க தடிமனான குச்சி அல்லது நாலைந்து தென்னந் துடைப்பத்தின் குச்சிகளை உடைத்து மடக்கி தடிமனாக்கி இடையில் சொருகி கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொழுது குச்சிகள் தளர்வடையாமல் இறுக்கமாக நிற்கும். இதே போல தென்னந் துடைப்பத்திலும் அடிக்கடி குச்சிகள் உதிராமல் இருக்க செய்து வைத்துக் கொள்ளலாம். தென்னந் துடைப்பத்தை பொறுத்தவரை கயிறு கொண்டு கட்டி வைப்பதை விட துணியால் கட்டி வைப்பது இறுக்கத்தை ஏற்படுத்தும்.

broom-thudaippam

பூந்துடைப்பம் நீளமாக இருக்கும் பொழுது வீட்டை கூட்டுவதற்கும், வீட்டின் பொருட்களுக்கு இடையே துடைப்பத்தை விட்டு எடுப்பதற்கும் சிரமமாக இருக்கும். மேலும் துடைப்பத்தின் நுனிப் பகுதியானது சீரற்ற நிலையில் இருப்பதால் வீட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் போகும். எனவே முனைப்பகுதியை கத்தரிக்கோலை கொண்டு லேசாக கத்தரித்து விட்டால் போதும். சமமான அளவுடன் மூலை முடுக்குகளில் இருக்கும் தூசு, தும்புகளை எளிதாக வார பயன்படும்.

- Advertisement -

மேலும் துடைப்பத்தை சுலபமாக பயன்படுத்த மற்றும் நீண்ட நாள் துடைப்பம் உழைப்பதற்கு துடைப்பத்திற்கும், அதன் கைபிடிக்கும் இடையே இருக்கும் துடைப்பத்தின் மேற்புறப் பகுதியில் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்டி விடுங்கள். இப்படி செய்யும் பொழுது துடைப்பம் அகன்று போகாமல் குறுகி நேர்த்தியாக இருக்கும். இதனால் வீட்டை கூட்டுவதற்கும் சுலபமாக இருக்கும். குச்சிகளும் இடை இடையே உடையாமலும், உதிராமலும் இருக்கும். அது போல் துடைப்பத்தை கைப்பிடி இருக்கும் பக்கத்தை கீழே இருக்குமாறு தலைகீழாக நிற்க வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தரையில் படுக்க வைக்கலாம்.

broom

துடைப்பம் இருக்கும் பகுதியை கீழே இருக்கும் படி சுவற்றில் சாய்த்து வைத்தால் விரைவாக துடைப்பம் வளைந்து கிளைகள் உதிர ஆரம்பிக்கும். கதவிற்கு பின்னால் துடைப்பத்தை வைப்பது மிகவும் நல்லது. ஆணி போன்ற ஏதாவது ஒரு பகுதியில் துடைப்பத்தை மாட்டி வைப்பது இன்னும் கூடுதலாக உழைக்க வைப்பதற்கு நல்லது. எனவே இதன்படி துடைப்பத்தை பராமரித்து வந்தால் எத்தனை மாதங்கள் ஆனாலும் துடைப்பத்திலிருந்து ஒரு குச்சி கூட உதிராமல் வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ! அப்படியே துடைப்பத்தை பாதுகாக்கலாம்.

- Advertisement -