உங்கள் செடியின் இளம் தளிர்களை, மொட்டுக்களை தாக்கும் இந்த பூச்சியை வீட்டில் இருக்கும் இந்த 1 பொருளை வைத்தே விரட்டி அடிக்கலாம்! செடியில் தவறியும் விரட்டக் கூடாத பூச்சியா? அப்படி என்ன பூச்சி அது?

aphids-plant-perungayam

உங்கள் செடியின் இளம் தளிர்களை அதிவேகமாக தாக்கும் நோய்களில் ஒன்று தான் அஸ்வினி பூச்சி. இது செடிகளின் இளம் தளிர்களையும், இலைகளுக்கு அடியிலும் புதிய மொட்டுகளிலும் அதிகமாக தாக்கக் கூடிய ஒரு வகைப் பூச்சி ஆகும். இந்த பூச்சிகள் செடிகளில் இருந்தால் செடி வேகமாக அதன் வளர்ச்சியை இழக்கும். செடியின் ஆரோக்கியம் குன்றிப் போய் சோர்வடைந்து விடும். இதற்கு வீட்டில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த 1 பொருளை வைத்தே சுலபமாக விரட்டியடிக்க முடியும். அது போல ஒரு செடியில் இந்த வகையான பூச்சிகள் இருந்தால் அதனை தவறியும் விரட்டி அடிக்காதீர்கள்! அது இருந்தால் மற்ற தீமை செய்யும் பூச்சிகளை சாப்பிட்டு நமக்கு நல்லது தான் செய்யும். அது என்ன பூச்சி? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நீங்களும் படியுங்கள்.

aphids

ரோஜா செடி, மல்லி செடி, கனகாம்பரம், அவரை, காராமணி போன்ற செடிகளை அதிகம் தாக்கும் அஸ்வினி பூச்சி கருப்பு, பச்சை சிவப்பு போன்ற வண்ணங்களில் மிகச் சிறிய அளவில் நுண்ணியதாக இருக்கும். இதை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தான் தெரியும். இதனை நாம் வளர விட்டு விட்டால் செடி முழுவதும் பரவி விடும் ஆபத்து உண்டு. நமக்கு ஆரம்பக் கட்டத்திலேயே தெரிந்து விட்டால் அதனை சுலபமாக விரட்டி அடித்து விடலாம்.

செடிகளில் அதிக எறும்பு வரும் பொழுது அவைகள் விட்டுச் செல்லும் கழிவுகளிலிருந்து இந்த அஸ்வினி பூச்சி உருவாகிறது. அதில் இருக்கும் சர்க்கரை தன்மையை உறிஞ்சிக் கொள்வதற்கு அஸ்வினி பூச்சி படை எடுத்து வருகிறது. இளம் மொட்டுகளை பாதித்து பூக்களின் வளர்ச்சியை வேரறுக்க செய்யும் இந்த அஸ்வினி பூச்சியை சுலபமாக விரட்டியடிக்க என்ன செய்யலாம்? எறும்புகள் வரும் பொழுதே செடியின் மீது அக்கறை செலுத்துங்கள். செடியில் அதிகம் எறும்புகள் வராமல் இருக்க வாரம் ஒரு முறை வேப்ப எண்ணையை ஸ்பிரே செய்து வரலாம்.

lady-bug-eats

உங்கள் செடிகளில் லேடி பக்(lady bug) எனப்படும் சிவப்பு நிற பூச்சிகள் இருந்தால் அதனை விரட்டி அடித்து விடாதீர்கள். அது நமக்கு நன்மைகளை தான் செய்யும். சிலர் அதனால் ஆபத்து வருமோ! என்று துரத்தி அடித்து விடுகின்றனர். ஆனால் உண்மையிலேயே லேடி பக் இந்த அசுவினி பூச்சிகளை தேடி தேடி போய் தின்றுவிடும். இதனால் செடியின் வளர்ச்சிக்கு வரும் ஆபத்து தடுக்கப்படுகிறது. எனவே லேடி பக் இருந்தால் இனி அதை துரத்தி அடிக்காதீர்கள். அதனால் எந்த ஒரு தீங்கும் உங்கள் செடிகளுக்கு விளையப் போவது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம், கட்டி பெருங்காயமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டி பெருங்காயத்தை உலர்த்தி நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் பெருங்காயம் ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பெருங்காயம் கரைந்து போன பின் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை அஸ்வினி பூச்சி இருக்கும் இடங்களில் வேகமாக ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனை பூச்சி தொந்தரவு இருக்கும் பொழுது மட்டும் செய்தால் போதும்.

perungayam

இரண்டிலிருந்து மூன்று முறை வாராவாரம் இதை செய்வதால் செடிகளில் இருக்கும் அஸ்வினி பூச்சிகள் முற்றிலுமாக தடுக்கப்படும். செடிகளின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். பெருங்காயம் பதிலாக பூண்டும் பயன்படுத்தலாம். ஒரு 10 பூண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்து இதே போல பயன்படுத்தலாம். பூண்டு மற்றும் பெருங்காயம் இரண்டுமே பூச்சிகளை அழிக்கும் இயற்கையான பூச்சிக் கொல்லியாக இருக்கின்றது. எனவே உங்கள் செடிகளின் ஆரோக்கியத்திற்கு இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.