வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த 7 வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து பாருங்கள். 7 வாரங்களில் நீங்களே பல வித மாற்றத்தை உணர்வீர்கள்.

Vilakku
- Advertisement -

பொதுவாக தீபம் ஏற்றுவது என்பது நமது வீடுகளில் உள்ள தீய சக்திகளை அழித்து ஒரு பிரகாசமான வாழ்க்கையை வாழ்வதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு சிறந்த இறை வழிபாடு ஆகும். இந்த தீபச்சுடரானது எப்படி இருளை அகற்றி வெளிச்சத்தை கொடுக்கிறதோ அதேபோல் மனதில் உள்ள கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தையும் அகற்றி ஒரு தெளிவை கொடுத்து வாழ்விற்கு வளத்தை அளிக்கிறது. இப்படிப்பட்ட தீபத்தை நாம் எப்படி ஏற்றுவது என்பது பற்றியும் தீபம் ஏற்றும்போது செய்யும் தவறுகளை எப்படி சரி செய்யவேண்டும் என்பது பற்றியும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

deepam2

விளக்கை ஏற்றும் பொழுது கைகால் முகம் கழுவிவிட்டு தான் ஏற்ற வேண்டும். காலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் பொழுது நிச்சயம் குளித்துவிட்டு பிறகுதான் விளக்கு ஏற்றவேண்டும். ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் மட்டும் முகம், கை, கால் கழுவி விட்டு பின்னர் விளக்கு ஏற்றலாம். மாலையில் விளக்கேற்றும் பொழுது முகம், கை, கால் கழுவி விட்டு விளக்ககை ஏற்றினால் போதுமானது தான்.

- Advertisement -

அடுத்ததாக விளக்கு ஏற்றும்முன் பெண்கள் அவர்களை எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் கைகள் நிறைய வளையல்கள் அணிந்து கொண்டு நெற்றி வகுடில் திலகமிட்டு மாங்கல்யத்தில் குங்குமம் வைத்து நமது பாரம்பரிய முறைப்படி புடவை கட்டிக்கொண்டு பின்புதான் விளக்கு ஏற்ற வேண்டும். இப்பொழுது உள்ளவர்களுக்கு புடவை கட்டுவதில் சிரமம் உள்ளது என்றால் ஒரு அழகிய சல்வார் அணிந்து கொண்டு விளக்கு ஏற்றலாம். எப்போதும் விளக்கு ஏற்றும் பொழுது தலைவிரி கோலத்துடன் இருக்கக்கூடாது. தலையை வாரி முடித்து சிறிதளவு பூ வைத்துகொண்டு பின்னர் விளக்கு ஏற்றினால் மிகவும் சிறந்தது. இப்படி மங்களகரமாக பெண்கள் விளக்கு ஏற்றும் பொழுது கடவுள் அருள் பரிபூரணமாக அந்த குடும்பத்திற்கு வந்தடையும்.

kubera deepam

அடுத்ததாக நாம் விளக்கு ஏற்றும் பொழுது பயன்படுத்தக்கூடிய எண்ணை, நெய் அல்லது நல்லெண்ணெயாக இருக்கலாம். இதைத் தவிர மற்ற எண்ணெய்களான இலுப்ப எண்ணெய், பஞ்ச கூட்டு எண்ணெய் இவற்றையெல்லாம் நாம் கோவில்களில் வழிபாடு செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வீடுகளில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றுவதுதான் மிகச் சிறப்பான பலன்களை பெற்றுத்தரும்.

- Advertisement -

அடுத்ததாக நாம் தீபமேற்றி வழிபடும் பொழுது புது திரி பயன்படுத்திதான் தீபம் ஏற்ற வேண்டும். முந்தையநாள் ஏற்றிய தீபத்தில் உள்ள பழைய திரியைத் தூண்டி அப்படியே விளக்கை ஏற்றக்கூடாது. முந்தய நாள் நாம் வழிபடும் பொழுது ஊற்றிய எண்ணெயை அப்படியே பயன்படுத்தலாம் ஆனால் திரையை மட்டும் நிச்சயம் புதியதாக மாற்றி தான் தீபம் ஏற்ற வேண்டும்.

deepam

அடுத்ததாக தீபமேற்றி வழிபடும் பொழுது நமது தலைவாசல் சிறிதளவாவது திறந்திருக்க வேண்டும். நமது பின் வாசல் நிச்சயமாக மூடி இருக்க வேண்டும். இது கட்டாயமாக பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம். ஒரு சிலர் இரண்டு கதவுகளையும் அடைத்து விட்டு தீபம் ஏற்றுவார்கள். கண்டிப்பாக இவ்வாறு செய்யக்கூடாது. தீபம் ஏற்றும் பொழுது ஒரு இரண்டு நிமிடமாவது நமது தலை வாசல் திறந்திருக்க வேண்டும்.

- Advertisement -

panjakavya-vilakku0

அடுத்ததாக நாம் தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்யும் பொழுது நிச்சயம் ஒரு அகல் விளக்கை பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். நாம் என்னதான் பித்தளை விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி விளக்கு என்று எத்தனை விளக்குகள் வைத்து பூஜை செய்தாலும் ஒரே ஒரு அகல் விளக்கு மட்டும் வைத்து நெய் ஊற்றி தீபமேற்றி பூஜை செய்து வருவதன் மூலம் அனைத்து பலன்களை நாம் பெற முடியும்.

deepam

அடுத்ததாக ஒரு சில வீடுகளில் ஆண்கள் தீபமேற்றி வழிபாடு செய்வது என்பது வழக்கமாக உள்ளது. ஆண்கள் வழிபாடு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் பெண்கள் இருக்கும் வீடுகளில் பெண்கள் தான் நிச்சயம் இதை செய்ய வேண்டும். பெண்கள் மகாலட்சுமியின் ஸ்வரூபம் என்பதால் அவர்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டு விளக்கை ஏற்றி பூஜை செய்து வருவதன் மூலம் குடும்பம் தழைக்கும்! செல்வம் சிறக்கும்! பெண்கள் இல்லாத வீடுகளில் ஆண்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

நீங்கள் தீபம் ஏற்றும் பொழுது இதுவரையில் ஏதேனும் ஒரு சில தவறுகள் செய்திருந்தால் அவற்றை இப்பதிவின் மூலம் சரி செய்து கொண்டு, தொடர்ந்து தீபத்தை முறையாக ஏற்றி வழிபட்டு வாருங்கள். 7 வாரங்களில் உங்கள் வீட்டில் மன நிம்மதியை ஏற்படுத்தும் மாற்றங்கள் ஏதாவது நிகழும்.

- Advertisement -