உங்கள் பட்டுப்புடவையை எப்போதுமே பட்டுப் போல் பாதுகாக்க வேண்டுமா? 10 வருடம் ஆனாலும் பட்டுப் புடவை புதுசு போலவே இருக்க இந்த டிப்ஸ் போதுமே.

saree
- Advertisement -

புடவை என்றாலே விரும்பாத பெண்கள் யாரும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நவநாகரீக உடைகள் பல வந்தாலும், இன்னுமும் நாம் திருமணம், சடங்கு இது போன்ற நம் வீட்டு விசேஷங்களுக்கு புடவை கட்டுவதை தான் ஒரு பாரம்பரியமாக வைத்துள்ளோம். இதற்காகவே பட்டு புடவையை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அப்படி ஆசைப்பட்டு வாங்கிய பட்டுப் புடவைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது என்பது கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்குவதை விட, கடினமான ஒன்று. அதனாலயே இன்று பெருமளவில் பட்டு போல் உள்ள பேன்சி புடவைகளுக்கு பெண்கள் மாறி விட்டனர். இனி நீங்கள் ஆசைப்பட்டு கட்டி அழகு பார்க்க நினைக்கும் பட்டுப் புடவைகளை தாராளமாக வாங்கி கட்டிக் கொள்ளுங்கள். அதை பராமரிக்க இதோ எளிய வழிகள்.

முதலில் நாம் எந்த பட்டுப்புடவை வாங்கினாலும், அதை உடுத்திய பிறகு பீரோவில் வைக்கும் போது அப்படியே வைக்கக்கூடாது. அதை குறைந்தது ஐந்து மணி நேரமாவது நிழலில் ஆறவிட வேண்டும்.

- Advertisement -

புடவையை எப்பொழுதும் வெயிலில் காய வைக்கவே கூடாது. இப்படி செய்வதனால் புடவையின் நிறம் மாறி அது பட்டுப் புடவை காண தன்மையை இழந்து விடும். எனவே எக்காரணம் கொண்டும், மறந்தும் கூட வெயிலில் காய வைக்காதீர்கள். வீட்டிலே நிழலில் உலர்த்தி எடுங்கள்.

ஆற வைத்த புடவையை நாம் அப்படியே எடுத்து பீரோவில் வைக்கக்கூடாது. இப்போதெல்லாம் பட்டுப்புடவை வைப்பதற்கென்று காட்டன் கவர் தருகிறார்கள், இல்லை என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மஞ்சள் பையில் வைத்து, தான் பீரோவில் வைக்க வேண்டும். அப்படியே மடித்து வைக்க கூடாது இது மிகவும் முக்கியமான ஒன்று.

- Advertisement -

காட்டன் பைகளில் வைக்கும் புடவை நல்ல ஒரு மனத்துடன் இருக்க சிறிது ஏலக்காய் போட்டு வைக்கலாம். இது துணிகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் அதில் நல்ல நறுமணமும் வீசும், முடிந்த அளவிற்கு பட்டுப்புடவையில் வாசனைக்காக, ரசாயனம் கலந்த பொருட்களை வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

வெள்ளி சரிகை கொண்ட பட்டுப் புடவையை நீங்கள் வாங்கினீர்கள், என்றால் கட்டாயமாக அதை உள்புறமாக மடித்துதான் வைக்க வேண்டும். வெள்ளி சரிகை மேல்புறம் தெரியுமாறு வைக்கவே கூடாது. ஏனென்றால் வெள்ளி சரிகை மேல்புறமாக தெரியும் படி வைத்தால் வெள்ளி சீக்கிரம் கறுத்து விடும். இதனால் துணியின் பளபளப்பு போய் விடும். எனவே வெள்ளி சரிகை வைத்த புடவை வாங்கினால் உள்புறமாக மடித்து வையுங்கள்.

இப்படி ஆற வைத்து பைகளில் போட்டு பத்திரமாக எடுத்து வைத்து விட்டோம் என்று அப்படியே விட்டு விடாதீர்கள், இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது எடுத்து, நீங்கள் மடித்து வைத்ததற்கு மறுபுறமாக புடவையை மடித்து வைக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மடித்து வைத்து மடிப்புகளில் இழை இழையாக விட்டு பட்டுப்புடவை சீக்கிரம் கிழிந்து விடும்.

பட்டுப்புடவையில் கறைகள் ஏதாவது பட்டு விட்டால் அதில் இப்போதெல்லாம் கடைகளில் இந்த வெட் டிஷ்யூ பேப்பர் கிடைக்கிறது, இல்லை சாதாரண டிஷ்யூ பேப்பரோ அல்லது காட்டன் துணிகள் இருந்தால் அதை வைத்து லேசாக துடைத்து பாருங்கள். கறை போகவில்லை என்றால் சிறிதளவு பேபி பவுடர் அல்லது விபூதி இரண்டில் ஏதாவது ஒன்றை போட்டு அந்த கறைகள் மேல் லேசாக துடைத்து விடுங்கள், எக்காரணத்தை கொண்டும் அழுத்தி துடைக்க கூடாது. அவ்வளவு தான் இப்படியே உங்களிடம் உள்ள அனைத்து புடவைகளும் பத்திர படுத்தி பட்டை, பட்டு போலவே உடுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -