மழைக்காலத்தில் இப்படி ஒரு டீயை மட்டும் ஒரு முறை போட்டு பாருங்கள்! நாள் முழுவதும் ஆக்டிவா இருப்பீங்க!

masala-tea

டீ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நம் நாட்டில் மிகவும் அதிகம். காபியை விட டீயை அதிகம் விரும்புபவர்கள் அதில் அடிமையாகி விடுகின்றனர். ஒரு வேளை டீயை குடிக்காவிட்டால் கூட எதையோ இழந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். விதவிதமான டீ வகைகள் இருந்தாலும், மசாலா கலந்த டீ-க்கு தனி சுவை தான். அதுவும் மழைக்காலத்தில் இப்படி ஒரு டீ குடித்தால் அன்றைய நாள் முழுவதுமே சுறுசுறுப்புடன் இயங்க முடியும். டீ போட்டா இப்படித் தான் போடணும். அதை எப்படி போடணும்? என்று நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? அப்படின்னா தொடர்ந்து இந்த பதிவை படியுங்க!

tea-making

காலம் காலமாக தேநீரை தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு அதனை நிறுத்தும் பொழுது, நிச்சயமாக உடல் படபடத்து விடும். ஒருவிதமான தேடுதலை உருவாக்கும். இப்போது டீ குடித்தே ஆக வேண்டும், இல்லை என்றால் மூளையே வேலை செய்யாது என்பது போல பதட்டமாக இருக்கும். இதைத்தான் அடிக்சன் என்கிறோம். இது எல்லா உணவுப் பொருட்களுக்கும் இருப்பதில்லை. ஆனால் டீ மற்றும் காபி தொடர்ந்து குடித்தால் கட்டாயம் வந்து விடுகிறது.

இஞ்சி டீ, மல்லி டீ, சுக்கு டீ என்று டிசைன் டிசைனாக டீ வகைகள் இருந்தாலும். எல்லாம் கலந்த கலவையாக மசாலா டீ குடிக்கும் பொழுது உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். அதுவும் மழைக்காலத்தில் அடிக்கடி சளி, இருமல் என்று தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் காண இப்படி ஒரு டீ-யை போட்டுக் கொடுக்கலாம்.

tea-making1

மூலிகை டீ செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி – ஒரு துண்டு, சுக்கு – சிறு துண்டு, துளசி இலை – 10, ஓமவல்லி – 2,
ஏலக்காய் – 3, பட்டை – 1, கிராம்பு – 1, மிளகு – 10, தனியா – கால் டீஸ்பூன்,
வெல்லம் – கால் கப், பால் – இரண்டு டம்ளர், தண்ணீர் – ஒரு டம்ளர், டீ தூள் – 2 டீஸ்பூன்.

- Advertisement -

மூலிகை டீ செய்முறை விளக்கம்:
முதலில் தண்ணீர் சேர்க்காத பாலை சுண்டக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். அதனை 2 கப் அளவிற்கு தனியாக எடுத்து வெதுவெதுப்பாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். வெல்லம், டீ தூள் மற்றும் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.

tea-making2

மூலிகைப் பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் மாறியதும், இரண்டு டீஸ்பூன் அளவிற்கு டீ தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். டீ தூள் நன்கு கொதித்ததும், ஏற்கனவே ஆற வைத்த பாலை சேர்த்து கொதிக்க விடவும். 2 நிமிடம் கழித்து அதனுடன் பொடிப்பொடியாக செய்து வைத்த வெல்லத்தை கலந்து கொள்ளுங்கள். மீண்டும் டீ-யை கொதிக்க விடுங்கள். அந்த கொதி நிலையிலேயே வெல்லம் கரைந்து விடும்.

tea-making3

வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையும் சேர்க்கலாம். ஆனால் சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியம் மிகுந்தது என்பதால் கூடுமானவரை வெல்லத்தை சேர்ப்பது நல்லது. அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி பரிமாற வேண்டியது தான். மழைக் காலங்களில் இந்த டீ-யை பருகினால் அற்புதமான மணமுடன், அலாதியான சுவையுடன் இருக்கும். ஒரு நாளை நமக்கு உற்சாகத்துடன் வைக்க எழுந்ததும் முதல் வேலையாக இந்த டீயை பருகினால் நல்லது. நீங்களும் முயற்சி செய்து ருசித்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
3 நிமிஷத்துல இட்லி தோசைக்கு சூப்பரான காரச் சட்னி! இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.