விளக்கை முறையாக குளிர்விப்பது எப்படி தெரியுமா?

vilaku-3
- Advertisement -

ஆன்மீக ரீதியாக ஒருவரது மனதை பிரகாசமாக வைக்கக்கூடிய விளக்கை வீட்டில் ஏற்றுவதற்கும் குளிர வைக்கவும் சில முறைகள் இருக்கிறது.

vilakku

விளக்கில் இருந்து வரும் வெளிச்சம் பிரகாசமாக இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? விளக்கை எப்படி குளிர்விப்பது? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

தீபம் ஏற்றியதும் அதில் முப்பெரும் தேவியர் வந்து விடுவர் என்பது ஐதீகம். ஆகையால் தீபம் எப்போதும் பிரகாசமாக எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். திரியின் சுடர் பிரகாசமாக இல்லை என்றால் மற்றொரு திரியை தீபத்தில் இட்டு ஏற்றிவிட்டு ஏற்கனவே உள்ள திரியை எடுத்து விட வேண்டும்.

vilakku

தீபத்தில் முப்பெரும் தேவியர் குடியிருப்பதால் அதை முறையாக குளிர்விக்க வேண்டும். வீடுகளில் எப்போதுமே ‘தீபத்தை அனைத்துவிடு’ என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாது. அதற்கு பதிலாக ‘தீபத்தை குளிரவிடு, தீபத்தை நிறுத்து’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம். தீபத்தை வாயால் ஊதியோ அல்லது கைகளை அசைத்தோ எப்போதுமே குளிர வைக்கக்கூடாது.

vilakku

கல்கண்டினாலோ அல்லது பூக்களாலோ அல்லது குளிச்சியாலோ குளிர்விக்கலாம். தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை மெதுவாக பின்புறமாக இழுத்துக்கொண்டே “ஓம் சாந்த ஸ்ரூபிணே நம” என்ற மந்திரத்தை கூற வேண்டும். தீபத்தில் இருந்து வரும் சுடர் மெல்ல மெல்ல குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்படி செய்யவேண்டும்.

- Advertisement -