வீட்டில் பூஜை செய்பவர்கள் இப்படி மட்டும் வழிபட்டால் அன்றைய பாவங்கள் அன்றே தீரும்! அதிசயத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? திரி கருகினால் என்ன சகுனம்?

Vilakku-lakshmi
- Advertisement -

ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்வது என்பதே மிகவும் நல்ல செயலாகும். பூஜைகள் என்பது இறைவனுக்கு செய்யப்படும் ஒரு தொண்டாகும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் போதும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படி விளக்கேற்றுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கியுள்ளன. விளக்கேற்றும் பொழுது நின்று கொண்டு விளக்கேற்ற வேண்டுமா? அல்லது அமர்ந்து கொண்டு விளக்கேற்ற வேண்டுமா? என்கிற சந்தேகம் நமக்குள் இருக்கும். காலை மாலை பூஜை செய்யும் பொழுது எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

kamatchi-vilakku

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எந்த காரணம் கொண்டும் விளக்கில் எண்ணெய் மட்டுமே எரிய வேண்டுமே தவிர, திரியை கருகவிட்டு விட கூடாது. இது மிகப் பெரும் பாவத்தை கொண்டு வந்து சேர்க்கும். பல்வேறு சகுனங்களில் திரி கருகிப் போவதும் ஒரு சகுனம் தான். திரி கருகி போனால் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் நடைபெறும். எனவே திரியை எண்ணெய்யில் மூழ்கி எடுத்து நன்கு திரித்து விட்டு மேலே தூக்கி விடுங்கள். அப்போது தான் விளக்கிலும் படாமல், திரியும் கருதாமல் எண்ணெய் தீரும் வரை நன்றாக ஜோதி எறிந்து தானாகவே அணைந்துவிடும். இதனை சரியாக செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெறலாம்.

- Advertisement -

இப்படி தீபமேற்றுவதில் கூட நிறைய சூட்சமங்கள் உள்ளன. காலையில் தீபம் ஏற்றும் பொழுது நின்றபடி ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றும் பொழுது இரவில் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடுவதாக ஐதீகம் உள்ளது. விளக்கு ஏற்றுவதால் விளக்கின் தீபத்தில் இருக்கும் ஒவ்வொரு அணுக்களிலும் தெய்வீக இறை சக்தி நிறைந்து, வீடு முழுவதும் பரவும். விளக்கின் ஜோதியில் இருக்கும் அணுக்கள் தான் இறைவன் என்கிறது சாஸ்திரம். ஆகவே உங்களுக்கு எங்கெல்லாம் ஏற்றி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அங்கெல்லாம் தீபத்தை தாராளமாக ஏற்றி வையுங்கள்.

vilakku

அதே போல மாலை வேளையில் தீபம் ஏற்றும் பொழுது நின்றபடி ஏற்றக்கூடாது. பூஜையறையில் அமர்ந்து கொண்டு, நிறுத்தி நிதானமாக தீபமேற்றி முறையாக பூஜைகள் செய்யப்பட வேண்டும். ஏதோ கடமைக்கு என்று பூஜைகள் செய்ய கூடாது. மனதார இறைவனை நினைத்து இறைவனுக்காக செய்யும் தொண்டாக எண்ணி விளக்கு ஏற்றும் பொழுது அதனால் வரும் தீப ஒளியில் இருக்கும் தெய்வீக கதிர்கள் உங்கள் மேல் படும் பொழுது உங்களுடைய பாவங்கள் நீங்குகிறது. மாலையில் விளக்கேற்றும் பொழுது இப்படி விளக்கேற்றினால் காலையில் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்வதாக ஐதீகம் உள்ளது.

- Advertisement -

poojai

இப்படி காலையிலும், மாலையிலும் விளக்கேற்றும் பொழுது நின்றபடியும், அமர்ந்த படியும் விளக்கேற்றினால் அன்றைக்கு செய்த பாவங்களை நீக்கி விடுவதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. தெரிந்தோ! தெரியாமலோ! எவ்வளவோ பாவங்களை நாம் அனுதினமும் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி தினமும் இருவேளையும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்து வந்தால் பாவங்களில் இருந்து விமோசனம் பெற்று நல்வாழ்வு பெறலாம்.

deepam

தீபம் ஏற்றி வைத்து விட்டு தீப ஒளியை ஐந்து நிமிடம் நன்றாக உற்றுப் பாருங்கள். அதில் சிவஸ்வரூபம் மற்றும் விஷ்ணு ஸ்வரூபம் இருப்பதை நீங்களே உணரலாம். தீபம் ஏற்றும் போது வீட்டில் பின் வாசல் கதவு இருந்தால் கட்டாயம் அதனை அடைத்து விட்டு தான் தீபத்தை ஏற்ற வேண்டும். பின் வாசல் கதவை விளக்கேற்றும் பொழுது திறந்து வைத்தால் அதன் வழியாக மூதேவி நுழைவதற்கு நாமே வழி விடுவதற்கு சமமாகும்.

இதையும் படிக்கலாமே
பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கொடுத்த பணத்தை திரும்ப வாங்க செவ்வாய்க்கிழமையில் இப்படி செய்து பாருங்கள்! உடனே அந்த பணம் கைக்கு வந்து சேரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -