பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கொடுத்த பணத்தை திரும்ப வாங்க செவ்வாய்க்கிழமையில் இப்படி செய்து பாருங்கள்! உடனே அந்த பணம் கைக்கு வந்து சேரும்.

atchathai-cash

வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் பலரும், இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு கூட ஓடி விடுவார்கள். பணம் வாங்கும் பொழுது அதை எப்படியாவது கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் வாங்குவார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களுடைய சூழ்நிலை மாறியதும், பணம் கட்ட முடியாமல் அவதிப்படுவார்கள். தகுதிக்கு மீறிய கடன் வாங்குவதும் ஒரு பாவம் தான் என்கிறது சாஸ்திரம். அவசரத்திற்கு கடனை கொடுத்து விட்டு, அவர்கள் என்னவோ குற்றவாளிகள் போல் அவர்களுடைய தேவைக்கு கூட அந்த பணத்தை பயன்படுத்த முடியாமல் பலரும் அவதிப்படுவார்கள். அப்படி மற்றவர்களும் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் என்ன செய்யலாம்? மீண்டும் அந்த பணம் திரும்பி வருமா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

பணத்தை வாங்கிவிட்டு நம்மால் கட்ட முடியாவிட்டால் ஏற்படும் துன்பங்களை விட, அந்த பணத்தை மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்து விட்டு, தன்னுடைய தேவைக்கு கூட பணம் இல்லாமல், அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்படும் பொழுது அது எப்படி இருக்கும்? என்பதை யோசித்துப் பாருங்கள். ஆக பணம் கடனாக வாங்கியவர்களை விட, அதனை கொடுத்தவர்களுக்கு தான் பாதிப்புகள் அதிகம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்தோ! தெரியாமலோ! மற்றவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு அதனை வசூல் செய்ய முடியாமல், தினமும் மனதிற்குள்ளேயே குமுறிக் கொண்டு இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று செய்யலாம். இப்படி செய்வதால் நிச்சயம் கொடுத்த பணம் எப்படியாவது உங்களிடம் திரும்பி வந்து சேர்ந்துவிடும். மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரமான இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? என்பதை இனி பார்க்க இருக்கிறோம்.

Oorai in Tamil
Oorai in Tamil

இந்த பரிகாரத்தை செவ்வாயன்று வரும் செவ்வாய் ஹோரையில் செய்வது மிகவும் நல்லது. செவ்வாய் ஓரை என்பது காலண்டரின் பின்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் கிரக ஓரைகளின் காலம் ஆகும். செவ்வாய்க்கிழமையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரையிலும், இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும் சுக்ர ஹோரை இருக்கிறது. இதில் காலை வேளையில் செய்வது மிகவும் விசேஷமானது. காலை 6 மணியில் தொடங்கி 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

இதற்கு முதலில் அட்சதை சிறிதளவு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அட்சதை என்பது பச்சரிசியும், மஞ்சளும் கலந்த கலவையாகும். அதுபோல் சனி பகவானுக்கு உரிய கருப்பு எள்ளை சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அட்சதையுடன் சேர்த்து கருப்பு எள்ளையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூவி விடுங்கள். பின்னர் கீழே வந்து வீட்டின் வடக்கு முகமாக பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். பூஜை அறை தனியே இருந்தால் பூஜை அறையில் வடக்கு முகமாக பார்த்து அமர்ந்து கொள்ளலாம்.

- Advertisement -

ellu 1-compressed

மந்திரம்:
‘ஓம் ஹிரீம் வம் பைரவாய நமஹ’

mantra-signature

பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை தொடர்ந்து 27 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 27 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் கொடுத்த பணம் உடனே விரைவாக உங்களிடம் தானாகவே தேடி வரும் என்பது ஐதீகம். இதனை பலரும் தங்களுடைய அனுபவத்தில் செய்து உணர்ந்து இருக்கும் ஒரு அற்புதமான பரிகாரமாகும். கிரக ஓரைகள் நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கிறது. ஓரைப் பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்தால் உங்களுக்கு தோல்வி என்பதே இருக்காது.

இதையும் படிக்கலாமே
பிள்ளையாருக்கு இந்த 2 பொருளைக் கொண்டு பூஜை செய்பவர்களுக்கு நல்ல திருமண வரன் சீக்கிரமே அமைவது உறுதி. திருமண வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.