கோவிலுக்கு சென்று, இறைவனை இப்படி வழிபாடு செய்தால் தான் பாவ விமோசனமும், புண்ணியமும் நம்மை சேரும். முறையான இறை வழிபாட்டை எப்படி செய்வது?

lingam2
- Advertisement -

அந்தக் காலத்திலிருந்தே நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஒரு விஷயத்தை சொல்லித் தந்து உள்ளார்கள். அதாவது ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்’ இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வதன் மூலம், செய்த பாவங்கள் தீரும், புண்ணியம் சேரும். அப்படி, அந்த கோவிலுக்கும் மனிதர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? எதனால், நம்முடைய முன்னோர்களால் ஆலய தரிசனம் மனிதர்களுக்கு நன்மையைத் தரக்கூடியது என்று சொல்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

shivan

அந்தக் காலகட்டத்தில் நம்முடைய முன்னோர்கள் சிவன் கோவிலை இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று ஒரு வரைமுறையை வைத்துள்ளார்கள். முழு மனதோடு இறைவனை இந்த முறைப்படி வழிபாடு செய்தால் தான் கோவிலுக்கு சென்றதன் முழுபலனையும் பெற முடியும் என்பதும் முன்னோர்களுடைய கருத்தாக இருந்து வந்தது. அந்த வழிபாட்டு முறைகளைப் பற்றியும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சிவன் கோவில்களிலுக்கும், மனிதனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. அது என்ன தொடர்பு? மனிதர்களுடைய உடலினை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். ஸ்தூல சரீரம், சூட்சம சரீரம், காரண சரீரம். மனித உடலில் இருக்கக் கூடிய இந்த மூன்று வகையான சூட்சமங்கள் சொல்லப்பட்டதே சிவ ஆலயத்தை வைத்துதான்.

kamatchi-amman-TEMPLE1

ஒரு சிவாலயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் மூன்று லிங்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்தூல லிங்கம், பத்ர லிங்கம், பரார்த்த லிங்கம். இதில் முதலாவதாக சொல்லப்படும் ஸ்தூல லிங்கம் என்பது கோபுரம். கோவிலில் இருக்கக்கூடிய கோபுரத்தை தரிசனம் செய்யும்போது நம்முடைய உடலால், அதாவது ஸ்தூல சரீரத்தால் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் நீங்குவதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கோபுரத்திற்கு உள்ளே நுழைந்து தானே கோவிலுக்குள் செல்கின்றோம். நாம் கோபுரத்திற்குள் நுழையும்போது ஸ்தூல உடலில் இருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்க படுவதாக நாம் உணர வேண்டும். அப்போது நாம் செய்த பாவங்களுக்கு விமோசனம் பெறப்படும். கோபுரத்திற்கு மற்றொரு பெயர் ஸ்தூல லிங்கம்.

sivan-temple

இரண்டாவதாக கொடிமரத்திற்கு அருகில் இருக்கும் கூடிய பலிபீடத்தை வணங்க வேண்டும். இதை பத்ர லிங்கம் என்று சொல்லுவார்கள். நம்முடைய உடலில் சூட்சமமாக மறைந்திருக்கும் அகங்காரம், கர்வம், மாயை இவைகள் அனைத்தையும் பலிபீடத்தில் பலிகொடுத்துவிட்டு தூய்மையான மனதோடு இறைவனை தரிசனம் செய்ய செல்ல வேண்டும்.

balipeedam

மூன்றாவதாக இறுதியாகத்தான் கர்ப்பகிரகத்தில் இருக்கக்கூடிய பரார்த்த லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும். நாம் செய்த பாவங்களை கோபுர வாசல் வழியாக நுழையும் போது அகற்றி விட்டோம். நம்முடைய மனதில் இருக்கும் மாயையை பலிபீடத்தில் பலிகொடுத்து விட்டோம். இறுதியாக இறைவனை வழிபாடு செய்யும்போது நம்முடைய மனம் தூய்மை அடைகின்றது. வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கின்றது.

pray

இதுதான் இறைவனை தரிசனம் செய்யக் கூடிய சரியான முறை என்று நம்முடைய சாஸ்திரம் சொல்கின்றது. இதை சிவன் கோவில்களுக்கு மட்டுமல்ல, எந்த கோவிலாக இருந்தாலும் இறைவனை வழிபாடு செய்யக்கூடிய முறை இதுதான். தூய்மையான மனதோடு முழு நம்பிக்கையோடு, எம்பெருமானை தரிசனம் செய்து வரங்களை கேட்டால் நினைத்தது உடனே பலிக்கும். பாவங்கள் நீங்கும் புண்ணியத்தை சேர்க்கலாம். என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -