கடவுளை இப்படி தரிசனம் செய்வது, நமக்குப் பாவத்தை தான் சேர்க்கும். கடவுளை எப்படி தரிசனம் செய்ய கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

சில விஷயங்களை நாம் செய்வதன் மூலம், நமக்குப் புண்ணியம் கிடைக்கின்றதோ இல்லையோ, அந்த விஷயத்தை நாம் செய்வதன் மூலம் ‘நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பாவம் வந்து சேர்த்து விடக்கூடாது.’ எப்போதும் இதில் நாம் உஷாராக இருந்து கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் பல நன்மைகளை செய்துவிட்டு, தெரிந்தோ தெரியாமலோ ஒரு சிறிய தவறு செய்து விட்டால் கூட, நாம் செய்த பல நல்ல செயல்களுக்கு பலன் இல்லாமல் போய்விடும் என்று சொல்கிறது சில சாஸ்திர நூல்கள். தினம் தோறும் நாம் இறைவனை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு செல்கின்றோம் அல்லவா? கோவிலுக்கு செல்வதன் மூலம் நமக்கு நிச்சயம் புண்ணியம் தான். ஆனால் இறைவனை இப்படி தரிசனம் செய்து பாவத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டாமே!

temple

நமக்கு பாவத்தை சேர்க்கக் கூடிய அந்தத் தவறுகளை, இதற்கு முன்பாக நீங்கள் செய்திருந்தால் பரவாயில்லை. இனி சாஸ்திரத்தை தெரிந்துகொண்டு, இந்த தவறு செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அது எந்தெந்த தவறு தெரிந்துகொள்ளலாமா?

முதலில் அதிகாலை வேளையில் உங்களுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருந்தால், அதாவது சன்னதி திறப்பதற்கு அர்ச்சகர், புரோகிதர் வரும் போதே நீங்கள் கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருந்தால், அந்த அர்ச்சகர் முதலில் மூலஸ்தானத்திற்கு சென்று, காலையில் செய்ய வேண்டிய பூஜை வழிபாட்டு முறைகளை, அபிஷேகங்களை முடித்துவிட்டு, இறைவனுக்கு அலங்காரம் செய்த பின்பு, அர்ச்சகர் இறைவனை தரிசனம் செய்த பின்பு தான், நாம் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.

vinayagar-abishegam

தவிர அர்ச்சகர் கதவைத் திறந்த உடனே, இறைவனை தரிசனம் செய்வது என்பது தவறான ஒன்று. இரண்டாவதாக, கோவிலில் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போது சிலர் கோவிலை பிரதக்ஷணம் வருவார்கள். இதுவும் தவறான ஒன்று என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அபிஷேகம் முடிந்தவுடன் இறைவனுக்கு அலங்காரம் செய்வதற்காக திரை போட்டிருக்கும் சிலபேர் இறைவனை காண வேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த திரையில் தெரியும் சந்து பொந்துகளில் எல்லாம் இறைவனை தரிசனம் செய்வார்கள். இது மிகப்பெரிய தவறு என்று சொல்லப்பட்டுள்ளது.

Amman-deepam-1

ஒரு கோவிலுக்கு நீங்கள் சென்றிருக்கும் போது, திடீரென்று விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டது. அதாவது கரண்ட் போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மூலஸ்தானத்தில் கட்டாயம் தீபம் எரியும். அந்த தீப ஒளியில் நீங்கள் இறைவனை தரிசனம் செய்யலாமே தவிர, ஏதோவொரு காரணத்தினால் தீப ஒளியும் இல்லாத போது, வெளிச்சம் இல்லாதபோது, எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் இறைவனை பார்க்க முயற்சி செய்யக் கூடாது என்றும் சொல்கிறது சாஸ்திரம். முடிந்தவரை, நீங்கள் கோவில்களுக்கு செல்லும் போது இந்த தவறுகளை செய்யாமல் இருந்தால் மிக மிக நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் முகம் பார்க்கக்கூடிய கண்ணாடியை உங்களுடைய வீட்டில் இப்படி வைத்தால், அதிர்ஷ்டமும் சந்தோஷமும், பணமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.