வீட்டிலிருந்தபடியே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களை, எப்படி பாதுகாத்துக் கொள்வது?

corona

கொரோனா நோய்த் தொற்றில் முதலாவது அலையை கடந்து வந்த நாம், இப்போது இரண்டாவது அலையை எதிர்கொண்டு சிக்கி தவித்து போராடிக் கொண்டிருக்கின்றோம். இரண்டாவது அலை இல்லாமல், மூன்றாவது அலையையும், எதிர்கொள்ளும் அபாயம் நமக்கு உள்ளதாக ஒரு கருத்து நிலவி வருகின்றது. இன்றைய சூழ்நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை, தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு, எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை பின்பற்றிய வழிமுறைகளைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Coronavirus1

நோயாளிகளுக்கு முதல் எதிரியே பயம் தான். மனதில் எந்த ஒரு பயமும் இல்லாமல், தனக்கு வந்த நோய் தொற்றை மன தைரியத்தோடு எதிர்கொண்டாலே போதும். நோயில் பாதி குணமாகிவிடும். ஆக, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மன பயம் இல்லாமல், தைரியத்தோடு இருக்க வேண்டும் என்பதுதான் முதல் விஷயம்.

அடுத்தபடியாக இந்த கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையையும் செய்யக்கூடாது.  உடலை வருத்தி எந்த ஒரு வேலையை செய்தாலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக தேவைப்படும். அதுவே ஓய்வு எடுக்கும் சூழ்நிலையில், நம்முடைய உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைவாக தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

corona1

சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கூட, நம்முடைய உடலுக்கு தரக் கூடிய வேலை தான். படுக்கையை விட்டு கழிவறைக்கு செல்வதின் மூலம் கூட, நம்முடைய உடலில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு குறையும் என்பது மருத்துவர்களின் கருத்து. அக மிகவும் உடல்நிலை சரியில்லாதவர்கள், அதிகப்படியாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைவாக உள்ளவர்கள் இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் தங்களுடைய படுக்கை அறையிலேயே முடித்துக் கொள்வதும் நல்லது.

- Advertisement -

இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய உடலில், ஆக்ஸிஜனின் அளவு 95 க்கும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை சாப்பிட்டு நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்குமே எந்த உணவை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

corona2

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், எல்லா வகையான சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை மட்டும் தவிர்த்து விட்டால் போதுமானது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், இப்படி குறிப்பிட்ட நோய்களுக்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருபவர்களாக இருந்தால், அவர்கள் மட்டும் வழக்கமாக தாங்கள் எந்த உணவு பழக்க வழக்க முறைகளை பின்பற்றி வருகிறீர்களோ, அதையே தொடர்ந்து பின்பற்றி கொள்ள வேண்டும்.

corona3

இவை தவிர, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மேல் சொன்ன விஷயங்களை செய்து சரியான முறையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும். இந்த நோய் தொற்றிலிருந்து விரைவாக விடுபட முடியும் என்று டாக்டர் கார்த்திகேயன் அவர்கள், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.