வெறும் 5 ரூபாய் செலவு செய்தால் போதுமே. எவ்வளவு பெரிய ஓட்டை காதில் இருந்தாலும், வெறும் 5 செகண்டில் அதை சரி செய்து விடலாம்.

ears2
- Advertisement -

பெண்களுக்கு அழகாக கம்பளை காதில் போட்டுக் கொள்ள வேண்டும் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சில பெண்கள், காதில் பாரம் அதிகமான கம்பளை தொடர்ந்து போட்டு வரும்போது, காதின் ஓட்டை சீக்கிரமே பெருசாகிவிடும். இப்படி பெருசான ஓட்டையில் பெரிய கம்பளை போட்டாலும் அழகாக இருக்காது. சின்ன கம்பளை போட்டாலும் ஓட்டைக்கு இந்த பக்கம் போய், அந்த பக்கம் வெளியே வந்து விடும். உங்களுடைய காதில் எவ்வளவு பெரிய ஓட்டை இருந்தாலும், இனி கவலையே இல்லை. உங்களுக்கு பிடித்தமான கம்பளை நீங்கள் போட்டுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள அழகு குறிப்பு மட்டும் உங்களுக்கு தெரிந்தால், வாங்க காது ஓட்டையை சின்னதாக்க கூடிய அந்த ரகசிய குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

காதுகளில் இருக்கும் ஓட்டையை சிறியதாக்கும் பேண்டேஜ்:
இந்த ஓட்டையை சரி செய்வதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் பேண்டேஜ். கடைகளில் விற்கும் இந்த ஐந்து ரூபாய் பேண்ஜை நீங்கள் வாங்கினாலும் சரி, இல்லையென்றால் சர்ஜரி பேண்டைட் என்று விற்கும். அது நம்முடைய சருமத்தின் நிறத்திலேயே இருக்கும். மெடிக்கல் ஷாப்பில் ‘சர்ஜிகல் பேண்டேஜ்’ என்றுகேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டாலும் சரி. அது உங்களுடைய சௌகரியம்.

- Advertisement -

வாங்கிய பேண்டேஜை உங்களுடைய காது ஓட்டையை விட கொஞ்சம் பெரிய அளவில் கத்திரிக்கோலை வைத்து வெட்டிக் கொள்ளுங்கள். அந்த பேண்டேஜை முதலில் காதில் ஓட்டை இருக்கக்கூடிய பின்பக்கத்தில் ஒட்டி விடுங்கள். பின்பக்கத்தில் ஒட்டிய பேண்டேஜில், விரிந்திருக்கும் ஓட்டைகள் சேர்ந்தது போல ஒட்ட வேண்டும். பின்பக்கம் ஒட்டி இருக்கும் இந்த பேண்டேஜில் தான் கம்பளை போடப் போகின்றோம். கம்பளை ஓட்டைக்கு கீழ்ப்பகுதியில் வைத்து போடக்கூடாது. ஓட்டைக்கு மேல் பக்கத்தில் இருக்கக்கூடிய பேண்டேடில் குத்தி பின்னாடி திருகாணி போட்டு விட்டு விடுங்கள். அவ்வளவுதான். உங்களுடைய கம்பல் உங்களுடைய காதில் சரியான இடத்தில் போய் அமர்ந்து கொள்ளும். கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

ஓட்டைக்கு பின்பக்கத்தில் மட்டும் பேண்டைட் ஒட்டி கம்மல் போட்டாலும் சரிதான். ஓட்டைக்கு முன் பக்கம் ஒரு பேண்டைட் ஒட்டி அதில் கம்பளை போட்டாலும், அது உங்களுடைய சௌகரியம். இப்படி இந்த பேண்டைடில் உங்களுடைய கம்பளை குத்தி இறக்குவது மட்டும்தான் லேசாக சிரமமாக இருப்பது போல தெரியும். ஷார்ப்பான கம்பல் என்றால் சுலபமாக பேண்டேஜ் இல் ஓட்டை போட்டு போய்விடும்.

- Advertisement -

திருகாணி வைத்த கம்பல் என்றால் பின்பக்கம் திருகாணியை முதலில் போட்டுவிட்டு, அதன் பின்பு முன்னாடி கம்பளை போட்டு திருகாணியை திருகிவிடுங்கள். அப்போது சுலபமாக கம்பல் உங்களுடைய காதில் மாட்டிக்கொள்ளும். எவ்வளவு பெரிய ஜிமிக்கி, எவ்வளவு பெரிய ஸ்டெட்டாக, இருந்தாலும் உங்களுடைய காதில் அழகாக போய் உட்கார்ந்து கொள்ளும். உங்களுடைய சரும நிறத்திற்கு ஏற்ப தான் பேண்டேட் இருக்கப் போகிறது. அதனால் அது வெளியில் தெரியுமோ என்று பயப்பட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள். தலையில் புதுசு புதுசா, சின்ன சின்ன முடிகள் எல்லாம் சீக்கிரம் சீக்கிரமாக வளர தொடங்கும்.

உங்களுடைய அழகுக்கு இனி எந்த சேதாரமும் வராது. நீங்க வேணும்னா ஒரே ஒரு முறை பேண்டைட் வாங்கி உங்களுடைய காதில் போட்டு இப்படி கம்பளை மாட்டிப் பாருங்கள். அவ்வளவு அழகாக நிற்கும். தினம்தோறும் இதை பயன்படுத்த முடியவில்லை என்றாலும் விசேஷங்களுக்கு செல்லும்போது இந்த குறிப்பு உடனடியாக உங்களுக்கு கை கொடுக்கும். நிரந்தரமாக இதை சரி செய்வதற்கு ஆபரேஷன் சிகிச்சை எல்லாம் இருக்கிறது. இருப்பினும் அதை எல்லோராலும் செய்ய முடியாது அல்லவா. அவர்களுக்காக இந்த குறிப்பு பயன்படட்டும். இந்த பயனுள்ள குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா கட்டாயம் முயற்சி செய்து பார்க்கணும்.

- Advertisement -