குழந்தைகளுக்கு இருக்கும் திருஷ்டியை எப்படி கழிப்பது ?

thirusti

குழந்தை என்றாலே அழுகு தான். அதனாலேயே குழந்தைகளுக்கு அவ்வப்போது திருஷ்டி ஏற்படும். இதனால் குழந்தைகள் சரியாக சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள், அவ்வப்போது சோர்ந்து விடுவார்கள். குழைதைகளுக்கு ஏற்பட்டிருக்கும் திஷ்டியை நீக்குவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம் வாருங்கள்.

baby

குழந்தைகளோடு வெளியில் சென்று வந்தால், ஓரிரு கடுகுமிளகாய், கல் உப்பு, வீட்டு வாசல் மண் ஆகிய மூன்றையும் கையில் வைத்துக்கொண்டு குழந்தயை உட்காரவைத்து, ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு, கரிச்சி கொட்டும் எல்லா கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று சொல்லிக்கொண்டே அதை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் குழந்தையின் தலையை சுற்றி அடுப்பில் போட்டால் திருஷ்டி கழியும்.

தினமும் மாலை ஒரு தட்டில் கற்பூரத்தை ஏற்றி அதை குழந்தைக்கு சுற்றி வாசலில் ஒரு ஓரமாக போடுவதன் மூலம் கற்பூரம் கரைவது போல் திருஷ்டி கரைந்துவிடும்.

thristi

குழந்தைகள் எதையாவது பார்த்து பயந்து போனால் சரியாக சாப்பிடமாட்டார்கள். இதற்கு பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுற்றி போடுதல் வழக்கம்.

சிறு குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் அதற்கு கண்திருஷ்டி கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கும். இதற்கு, ஒரு கை பிடி கல் உப்பை எடுத்துக்கொண்டு குழந்தையை தாயின் மடியில் அமரவைத்து தாய்க்கும் குழந்தைக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் போடுவதால், அந்த உப்பு எப்படி கரைகிறதோ அதுபோல் திருஷ்டியும் கரையும்.

salt

குழந்தைகளுக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைத்து, நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விடவேண்டும். இதனால் கண்திருஷ்டி கழியும்.