உங்களுடைய முகத்தில் வெயில் காலத்தில் பொரிப்பொரியாக கொப்பளங்கள் வருகின்றதா? இதை சரிசெய்ய வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்களே போதும்.

face

நிறைய பேருக்கு வெயில் காலம் வந்துவிட்டால் நெற்றிப் பகுதி, கண்களுக்குக் கீழே உள்ள பகுதி, தாடைப் பகுதி, மூக்குப் பகுதிகளில் பொரிப்பொரியாக சிறிய கொப்பளங்கள் போல் தோன்றும். சில பேருக்கு இது வந்த சில நாட்களிலேயே எதுவும் செய்யவில்லை என்றாலும் தானாகவே மறைந்துவிடும். சில பேருக்கு இந்த பொரிப்பொரியாக கொப்பளங்கள் மறைய சில நாட்கள் எடுக்கும். உங்களுடைய முகத்தின் அழகைக் குறைக்கும் இந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

face2

இது முகப்பரு வகையை சேர்ந்த பிரச்சனை அல்ல. இதை ஆங்கிலத்தில் Milia என்று சொல்லுவார்கள். இந்த கொப்பளங்கள் உங்களுடைய முகத்தில் வந்தால் கட்டாயமாக அதை கிள்ளி விடக்கூடாது. முகம் முழுவதும் பரவி விடும். இந்த கொப்புளங்கள் வெயில் காலத்தில் முகத்தில் வருவதற்கு என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

முகத்தில் அதிகப்படியான வியர்வை வரும் பட்சத்தில் அதை அடிக்கடி துடைக்காமல் விட்டால் இந்த Milia  பிரச்சனை வரும். வெயில் காலத்தில் முகத்தை அடிக்கடி கழுவாமல் அப்படியே விட்டுவிட்டாலும் இந்த பிரச்சனைகள் வரும். அதிக நேரம் வெயிலில் இருந்தால் முகத்தில் இப்படிபட்ட கொப்பளங்கள் ஏற்படும். மாதத்திற்கு ஒருமுறையாவது உங்களது முகத்தில் இருக்கும் டெட் செல்லை கட்டாயம் ஏதாவது ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு நீக்க வேண்டும். வெறும் அரிசி மாவை கொண்டாவது முகத்தை ஒருமுறை வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவி விட்டால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுத்துவிடலாம்.

face3

சரி, இப்போது பிரச்சனைகள் வந்து விட்டது என்ன செய்வது? முகத்தில் இருக்கும் கொப்பளங்களை நீக்க மூன்று முத்தான டிப்ஸ் உங்களுக்காக. உங்களுக்கு எது வசதியாக இருக்குமாமோ அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் நாம் தெரிந்துகொள்ள போகக்கூடிய குறிப்பு மிக மிக சுலபமான குறிப்பு. விளக்கெண்ணை, நம்முடைய சருமத்திற்கு அவ்வளவு நல்லது.

- Advertisement -

விரல்களில் ஒரு சொட்டு விளக்கெண்ணையை எடுத்து உங்கள் முகத்தில் இந்த கொப்பளங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் தடவி, மசாஜ் எல்லாம் செய்ய வேண்டாம், லேசாக தடவி அந்த எண்ணெய் உலர்ந்த பின்பு, முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி விடலாம். இதனால் முகத்தில் எண்ணெய் வடியும் என்ற பயம் தேவையில்லை. முகம் முழுவதும் இதை தடவ போவது கிடையாது.

face1

இரண்டாவது குறிப்பு. சமையல் அறையில் இருக்கும் ஆப்ப சோடாவை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய பௌலில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா, போட்டு கொஞ்சமாக தண்ணீர் போட்டு கலந்து அதை கொப்புளங்கள் உள்ள இடத்தில் மேலே தடவி, சரியாக பத்துவது நிமிடத்தில் முகத்திலிருந்து கழுவி விடவேண்டும். இந்த ஆப்பசோடா முகத்தில் அதிக நேரம் இருக்கக் கூடாது. குறிப்பாக சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் இதை பயன்படுத்தவே கூடாது.

sandle-wood-powder

மூன்றாவதாக, சாண்டல்வுட் பவுடர், சந்தன கட்டையின் தூள் கடைகளில் கிடைக்கின்றது. இதை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் சாண்டல்வுட் பவுடரை போட்டு கொள்ள வேண்டும். அதில் கொஞ்சமாக ரோஸ் வாட்டரை கலந்து இந்த கலவையை முகத்தில் இருக்கும் கொப்புளங்கள் மேல் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இந்தச் சாண்டல் உட் பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்தால் கூட நல்லதுதான். தவறொன்றும் கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் தெரியும்.